Saturday, April 6

கொம்பனித்தெருவில் இஸ்லாமிய கூட்டத்தை நடத்தவேண்டாம்: பொலிஸ் அறிவுறுத்தல்


cancellஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் கொம்பனித்தெருவில் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் கொள்கை விளக்கக் கூட்டம் நிறுத்தப்பட்டு குறித்த தினத்தில் அதன் தலைமைக் காரியாலயத்தில நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேற்படிக் கூட்டம் தற்கால முஸ்லிம்களின் நிலைகுறித்து திங்கட்கிழமை மாலை கொம்பனித்தெரு, ஹோலிரோஸரி மகா வித்தியாலயத்துக்கு முன்னால் நடைபெற ஏற்பாடகியிருந்தது.
கொம்பனித்தெரு பள்ளிவாசல்கள் சம்மேளம் கூட்டத்துக்கான பாதுகாப்பு குறித்து பொலிஸாரிடம் முறையிட்டபோது, இவ்விடத்தில் கூட்டத்தை நடத்தவேண்டாமென பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
அதற்கு மாற்றீடாக அக்கூட்டத்தை ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் தலைமை அலுவலகத்தில் நடாத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 comment:

  1. இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ,இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் எப்பவோ நடந்து, தொடர்ந்து இருக்கும்.

    தவ்ஹித் ஜமாஅத் மீதுள்ள இல்லை இல்லை,PJ மீதுள்ள குறுகிய,முட்டாள் சிந்தனைகளினால்,மக்களுக்கு மார்க்கம் தெரிந்து விட்டால் தங்கள் தில்லு முள்ளு,சுத்து மாத்து ,பொழைப்பு கெட்டு விடும் போன்ற காரணங்களினால் அரசுக்கு போட்டுக் கொடுத்து PJ யை காட்டி கொடுத்து,சந்ததிக்கு சந்தி மீட்டிங் போட்டு சிங்கள,தமிழில் பேசி சந்தோசப்பட்டார்கள்.அதே மாதிரி கொம்பனி தெரு மீட்டிங்கை தடுத்து நிறுத்தி உண்மையை சொல்ல விடாமல் திருப்திபட்டுக் கொண்டார்கள்
    அதே மாதிரி 2012 இல் SLTJ யை ஓரங்கட்ட வேண்டும் என்ற பேராசையினால் வஹாபிசம் என்ற கொள்கையை மிக மோசமாக சித்தரித்து இல்லாமல் ஆக்க வேண்டும் என்று அணுரதபுரம்,காலி போன்ற இடங்களில் இருந்து சோத்துக் கோஷ்டி(தைக்கா,தரீக்கா,மௌலான,செய்க் ,ACJU வை சேர்ந்த எல்லோரும் அல்ல பெரும்பான்மையோர்)அரசுக்கு கடிதம் எழுதப் போய் BBS எனும் பேயை கிளப்பி விட்டு தங்களுக்கு தாங்களே தலையில் மண்ணை அள்ளிப் போட்டு கொண்டு குத்துது குடையுது என்று குனுத்,துஆ என்று ஷோ காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

    தாங்களும் சொல்ல மாட்டார்கள்,சொல்ல வருபவர்களையும் விட மாட்டார்கள்.வைக்கோல் பட்டறை மிருகம் போல்.அதற்காக எவருமே 100% சரியென்று இல்லை.மற்ற தஹ்வா அமைப்புகளுடன் ஒப்பிடும் போது

    ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தவ்ஹீதை சொல்லக் கூடியவர்கள் தைரியமாக மார்க்கத்தின் உண்மைகளை போட்டு உடைத்து சொல்கிறார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

    ACJU உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!
    நம்மவர்களுக்கு மட்டுமல்ல,மாற்று மதத்தவர்களுக்கும் மார்க்கத்தை சொல்ல விடுங்கள்.உங்கள் சுய நலன்களுக்காக போட்டுக் கொடுக்காதீர்கள்.

    ReplyDelete