Saturday, April 6

'ஹலால் எதிர்ப்பு முஸ்லிம் சுற்றுலாப்பயணிகளை இழக்க காரணமாகலாம்'



உள்நாட்டு உற்பத்திகளிலிருந்து ஹலால் சான்று இலச்சினைகளை அகற்றும் நகர் நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம் உலக முஸ்லிம் சுற்றுலா பயணிகளிடமிருந்து கிடைக்கும் கணிசமான வருவாயை இழக்கும் அபாயத்துக்கு இலங்கை முகம்கொடுத்துள்ளது என சிங்கப்பூரின் சுற்றுலாபயண நிபுணர் பஸல் பஹர்தீன் தெரிவித்தார்.

'ஹலால் சான்றுப்படுத்தல் இலங்கையில் உணர்ச்சியோடு தொடர்பான பிரச்சினையாகிவிட்டது என நான் அறிந்துகொண்டுள்ளேன்' இது மிகவும் துரதிஷ்டமான விடயமாகும்.

சர்வதேச ரீதியில் குறிப்பாக ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் நாடுகள், முஸ்லிம் சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு மும்முரமாக போட்டியிடும் இந்த தருணத்தில் இப்பிரச்சினை ஏற்பட்டது துரதிஷ்டமானதாகும் என்றும் அவர் கூறினார்.

முஸ்லிம் சுற்றுலா பயணிகள் உலகில் சுற்றுலா மீது ஆகவும் கூடுதலாக செலவளிக்கும் தனியொரு தொகுதியாக காணப்படுவதாலேயே  இவ்வாறான கடும்போட்டி இன்று ஏற்பட்டுள்ளது.

எனவே, வர்த்தக இலாபம் கருதி பல நாடுகளும் முன்னிறுத்த முயன்றுவருகின்றனர்' என சிங்கப்பூரின் கி.றெசென்ற் கணிப்பு ஸ்தாபன நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி பஸல் பஹர்தீன் கூறினார்.

No comments:

Post a Comment