Friday, April 5

ஒழுக்கமான முஸ்லிம் பெண்களின் ஆடைகளை நாமும் பின்பற்ற வேண்டும்


vajira deroமுஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகள் ஒழுக்கமிக்கது முஸ்லிம் மாணவிகள் அணியும் ஆடை சிறந்தது. இதனை நாமும் பின்பற்ற வேண்டும் என வஜிர சிறுவர் நிலையப் பணிப்பாளர் கலாநிதி ஹுனுபலாக வஜிர ஸ்ரீ நாயக்க தேரர் கூறினார்.
சகல சமய ஆய்வு வட்டம் கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடத்திய செய்தியாளர் மகாநாட்டில்லே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, அண்மையில் முஸ்லிம் நாடொன்றுக்கு நான் விஜயம் செய்திருந்தேன். அங்கு முஸ்லிம் பெண்கள் அணிந்திருந்த ஆடைகள் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அந்த நாட்டில் கூட கவும்கள் அணிய முடியாது. இந்த ஆடை முறையை நாமும் பின்பற்ற வேண்டும். முஸ்லிம் பெண்கள் அணிந்தால் அழகானது. இந்த நல்ல விடயங்களை நாம் பின்பற்ற வேண்டும்.

சிங்களவர்கள் இந்த நாட்டில் ஒரு காலத்தில் 90 வீதம் வாழ்ந்தார்கள். இனறு அது 60 வீதமாகவுள்ளது. சனத்தொகை குறைய முஸ்லிம்களோ, தமிழர்களோ காரணமல்ல. பல்வேறு காரணங்களினால் எமது சமூகத்தவர்களது சனத்தொகை குறைந்துள்ளது. எமது மக்கள் மத்தியில் நிகாய பேதம் குலபேதம் போன்ற வேறுபாடுகள் இருக்கின்றன. நாமும் உற்பத்திக் கட்டுப்பாடுகளைச் செய்கின்றோம்.
முஸ்லிம்கள் என்பவர் யார். முஸ்லிம்கள் ஆண்கள் மட்டுமே இங்கு வந்தார்கள். அவர்கள் எமது பெண்களையே மணமுடித்தார்கள். அவர்களுக்கு எமக்குப் போன்றே இந்த நாட்டின் சகல உரிமைகளும் இருக்கின்றன.
ஜெனிவாப் பிரச்சினையின் போது முஸ்லிம் நாடுகளே எமக்கு உதவின். அமெரிக்க எமக்குதவவில்லை. யுத்த காலத்தில் முஸ்லிம்களே எமக்கு கூடுதலாக உதவினர் தமிழர்களும் உதவினர். இஸ்லாத்தில் நல்ல பண்புகள் உள்ளன. மற்றப் பெண்களைப் பார்ப்பது ஹராம், வட்டி எடுப்பது ஹராம் இவை நல்ல விடயங்கள். ஹராம், ஹலால் என்று பேசிப்பேசி இருக்காது நல்லவற்றை நாம் பின்பற்ற வேண்டும்.
இச் செய்தியாளர் மகாநாட்டில் பத்தேகம சபித தேரர், அக்குனவனா கல்லூரியின் முன்னாள் பணிப்பாளர் வண. பிதா கிரிஸ்தன், வண பிதா சக்திவேல், மௌலவி எம்.எப்.எம்.பைருஸ், மணி ஸ்ரீநிவாசக் குருக்கள், எம்.ரி.எம்.அஸுர், திருமதி விசாசா, மர்ஷாத் பாரி ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர்.

2 comments:

  1. Masha allah. great Muslim people could be a thankful to you dr. please think better way " we are Sri Lankans " . Jazakallahu hairan.
    Mohamed Haaris.

    ReplyDelete
  2. நலுள்ளம் கொண்டவர்களுக்கு நல்லவைகள் புரியும்.

    ReplyDelete