Friday, April 5

பாதுகாப்புச் செயலாளர் திங்களன்று ஜெய்லானி செல்கிறார்

gotaதப்தர் ஜெய்லானி பிரச்சினை தொடர்பாக நேரில் கண்டறிவதற்காக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ 8 ஆம் திகதி திங்கட் கிழமை அங்கு செல்லவுள்ளார்.
கடந்த திங்களன்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் போது ஜெய்லானி பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதென இணக்கம் காணப்பட்டது. நேரடியாக அங்கு சென்று நிலைமைகள் குறித்து ஆராயவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டிருந்தார்.
பொதுபலசேனாவின் அடுத்த இலக்கு ஜெய்லானி என அறிவிக்கப்பட்டதையடுத்து பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் சுமுகப்பேச்சுக்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஜெய்லானி பள்ளி அமைந்துள்ள பகுதியில் கூரகல விகாரையும் இருப்பதால் சர்ச்சையொன்று ஏற்பட்டிருந்தது. வெசாக் போயா தினத்தன்று ஆயிரக் கணக்கான பௌத்தர்களை ஒன்று திரட்டி அவ்விடத்தைக் கைப்பற்றப்போவதாக பொதுபலசேனா பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் எச்சரித்திருந்தார்.

இதனையடுத்து சுமுகமான முறையில் இதனைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மேற் குறித்த காணியில் முஸ்லிம்களுக்கென 22 ஏக்கர் காணி ஒதுக்க இணக்கம் காணப்பட்டது. 54 ஏக்கர் பொதுப் பாவனைக்கென ஒதுக்கப்பட்டது. பொதுவான காணியில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு கடைகளையும் அப்புறப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது. இக்கடைகள் தற்போது அகற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment