Tuesday, April 30

தம்புள்ளை பள்ளிவாசலுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் உதவி உண்டு : ஜனக பண்டார

janaka bandara thenenkoanதம்புள்ள பள்ளிவாசலைச் சுற்றி அக்கம் பக்கத்திலுள்ள கடைகள், வீடுகள் என்பன கடந்த ஒரு சில நாட்களாக  உடைக்கப்பட்டு வருகிறது. அதனுடன் தம்புள்ளப் பள்ளி வாசலும் உடைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும்  சந்தேகமும் அப்பிரதேச மக்களிடையே இருப்பது என்பது நியாயமானதுதான். எனினும் இப்பிரதேச மக்கள் சந்தேகப்படுமளவுக்கு பள்ளிவாசல் உடைக்கப்பட மாட்டாது. தம்புள்ளப் பள்ளிவாசலுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் உதவி எப்போதும் நிச்சயமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றேன்.
இது தொடர்பாக கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் வினவிய போது பள்ளிவாசல் அகற்றப்பட மாட்டாது  என்று தன்னிடம் தெரிவித்துள்ளதாக காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகொன் தெரிவித்தார்.

கடந்த ஒரு சில நாட்களாக நகர அபிவிருத்தி சபையினால்  தம்புள்ளப் பள்ளிவாசலைச் சூழவுள்ள 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உடைக்கப்பட்டுள்ன. பள்ளிவாசல் அமைந்துள்ள காணிக்கு நேராக இருமருங்கிலும் உள்ள கட்டிடங்களே இதில் உடைக்கப்பட்டுள்ளன. இதனோடு பள்ளிவாசலும் உடைக்கப்பட்டு விடும் என்ற ஒரு சந்கேம் மக்களிடம் நிலவியது. இது தொடர்பாக  குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் தலைமையில் தம்புள்ளப் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள்,  அப்பிரதேச சிங்கள முஸ்லிம் மக்கள் ஆகியோர்  உள்ளிட்ட குழுவினருக்கும் அமைச்சருக்குமிடையே தம்புள்ளையில் அமைந்துள்ள அமைச்சரின் இல்லத்தில் விசேட சந்திப்பொன்று நேற்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இந்தச் சந்திப்பிலேயே அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இவ்வாறு குறிப்பிட்டார்.
தம்புள்ளை பள்ளிவாசல் விடயத்தில் இந்தப் பிரதேச மக்களின் பிரதிநிதி என்ற விடயத்தில் நான் மிகவும் உறுதியாக இருக்கின்றேன். இருப்பினும் இந்தப் பள்ளிவாசலை பாதுகாத்துக் கொள்வது சம்மந்தமாக முஸ்லிம்கள் உறுதியுடன் இருப்பதன் மூலம்தான்  பள்ளிவாசலை பாதுகாத்துக் கொள்ளக் கூடிய ஒரு நிலைமையைக் கொண்டு வரலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகளையும் உடைக்கப்பட்ட கட்டிடங்களையும் ஸ்ரீ. சு. கட்சி ஆதரவாளர்களின் வீடுகள், கடைகள் உடைக்கப்பட்டதற்காக ஐக்கிய தேசிய கட்சியினர் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்ற விளம்பரப் பதாதை ஒன்று கட்டப்பட்டுள்ளதையும் படங்களில் காணலாம்.
 vv_Dambulla 5 (1)
vv_Dambulla 5 (4)

No comments:

Post a Comment