Monday, April 29

குழந்தைகள்,பெண்கள் விற்பனை செய்யப்படும் உலகின் பிரதான நாடாக இலங்கை?

20130429-074635.jpg
 பெண்கள், குழந்தைகள் விற்பனை செய்யப்படும் உலகின் மிகப் பிரதானமான நாடாக இலங்கை திகழ்கின்றது என மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீப மனமேந்திர தெரிவித்துள்ளார்.
கடற்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் தங்காலை கரையின் ஊடாக ட்ரோலர் படகைப் பயன்படுத்தி 35 நாட்களில் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களைக் கடத்துகின்றனர்.
வரலாற்றுக் காலத்தில் காணப்பட்ட அடிமைச் சேவக முறைமை இன்று சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கையாக மாற்றமடைந்துள்ளது.
இந்தியாவில் இன்னமும் அடிமைச் சேவக முறைமை காணப்படுகின்றது.
மனித உயிருக்கான மரியாதை அற்றுப் போயுள்ளது.

பிறந்த குழந்தையை கைவிட்டுச் செல்கின்றனர், குழந்தையை வீசி எறிகின்றனர்.
சந்தேக நபர்களை பொலிஸார் சித்திரவதை செய்ய முடியாது.
இந்த ஆண்டில் இதுவரையில் இவ்வாறான சித்திரவதைகள் தொடர்பில் ஒரு சம்பவமே பதிவாகியுள்ளது.
எனினும், ஏதேச்சாதிகரமாக கைது செய்தல் தொடர்பில் 30 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு எதிராக பதிவாகியுள்ளது.
பொலிஸ் நிலையங்களில் ஒரு முறைப்பாட்டை சரியான முறையில் பதிவு செய்யக் கூடிய அதிகாரிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.
சட்டவிரோதமான உத்தரவுகளை கடைநிலை அதிகாரிகள் பின்பற்ற வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment