Friday, June 28

சிறுபான்மையினருக்கு அநீதிகள் இழைக்கப்படும் போது மு.கா. மெளனமாக இருக்காது - ரவூப் ஹக்கீம்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் சிறுபான்மையினரின் விடயத்தில் மிக விழிப்பாகவே இருக்கும் அதற்காக முதலில் நாம் ஒருமித்த கருத்துடன் செயற்பட வேண்டும். அரசியலிலுள்ள சில சிறுபான்மையினத் தலைவர்கள் சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்பட எத்தனிக்கும் போது அதற்கும் ஆதரவளிக்கலாம். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் அவ்வாறான அநியாயங்கள் இழைக்கப்படுகின்ற போது மெளனமாக இருக்காது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை மத்திய குழு ஏற்பாட்டில் முப்பெரும் விழா கடந்த பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் மத்திய குழுவின் தலைவர் ஐ.எல்.சுலைமாலெவ்வை தலைமையில் நடை பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வடக்கு கிழக்கு முஸ்லிம்களை பாதுகாக்க செயற்படும் முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களை பாதுகாக்கவும் செயற்படும்.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் விளைவுதான் 13 ஆம் திருத்தச் சட்டமாகும். இந்த மாகாண சபை முறைமையை ஆரம்பத்தில் வித்திட்டதில் ஒன்று இந்த முஸ்லிம் காங்கிரஸாகும். அப்போது போட்டியிட்டவர்கள் எல்லோரும் நகல் உறுப்பினர்கள். இந்த மாகாண சபைத் தேர்தலில் முதன் முதலில் போட்டியிட்டு வந்தவன் நான் என்றும் எனக்கு மாகாண சபையின் அதிகாரங்களைப் பற்றி நன்கு தெரியும் அதைப்பற்றி யாரும் எனக்கு சொல்லித் தரத்தேவையில்லை என்று அமைச்சர் அதாவுல்லா அமைச்சரவைக் கூட்டத்தில் கூறினார்.

மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து நின்று வெற்றி பெற்று ஒரு சாதனை படைத்துக்காட்டியுள்ளது. இதற்கு மக்கள் பலத்த ஆதரவை தந்துள்ளதால் இக்கட்சி மக்கள் மத்தியில் உள்ளதை யாரும் அசைக்க முடியாது. 

No comments:

Post a Comment