Wednesday, June 26

கிழக்கு மாகாண சபையில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் 13 ம் திருத்த சட்ட பிரேரணை

13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமென சபரகமுவ மற்றும் தென் மாகாணசபைகளில் 13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சபரகமுவ மாகாணசபையில் இந்தத் தீர்மானம் 17 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசர விடயமாக மாகாண முதலமைச்சர் மஹீபால ஹேரத் இந்தத் தீர்மானத்தை சமர்ப்பித்திருந்தார். இந்தத் தீர்மானத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
  
இதேவேளை, தென் மாகாணசபையிலும் 13ம் திருத்தச் சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு மேலதிக வாக்கினால் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆறு ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து வாக்களித்தனர்.
மத்திய மாகாணசபையில் இந்த விடயம் 28ம் திகதி விவாதிக்கப்பட உள்ளதாகவும், வடமேல் மாகாணத்தில் நாளைய தினம் இந்த விடயம் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கிழக்கு மாகாண சபையில் இவ்வாறான ஒரு திர்மானம் கொண்டுவரப்படின் முஸ்லிம் காங்கிரஸினதும், ஏனைய முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்னவென்று கேள்வி எழுப்பபட்டுள்ளது.  குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்ளும், என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

No comments:

Post a Comment