Wednesday, May 8

அரசாங்கத்திலிருந்து விலகமாட்டோம்: அடித்துக் கூறுகிறார் அமைச்சர் ஹக்கீம்

hakeemஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் கட்சியை விட்டு வெளியேற மாட்டாது என அக்கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேராவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசுடன் முரண்பாடுகள் காணப்படுவதை ரவூப் ஹக்கீம் ஏற்றுக்கொண்டுள்ளார். பேச்சுவார்த்தைகளின் மூலமே இதற்கு தீர்வுகாண முடியும். ஆளும் கட்சியிலிருந்து எமது கட்சி விலகுவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை. இன்றைய தினம் நடைபெறவுள்ள கட்சியின் உயர்பீட கூட்டத்தில் இதுகுறித்து பேசப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
றிசானா நபீக்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிராகவே ஐ.தே.க. இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணை நேற்று பாராளுமன்றில் தோற்கடிக்கப்பட்டது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 136 வாக்குகள் ஆதரவாகவும் 32 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன.

No comments:

Post a Comment