Wednesday, May 8

நாங்கள் இனவாதிகள் தான்: ஜாதிக ஹெல உறுமய

1 நாங்கள் இனவாதிகள் தான், மதவெறியர்கள் தான் என்பது உண்மையே என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் வண. ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் இனவாதிகள் தான், மதவெறியர்கள் தான் என்பது உண்மையே, ஆனால் இந்த நாட்டில் இனவாதம், மதவெறி ஆகியவற்றை  உருவாக்கியவர்கள் நாங்கள் அல்ல.
இனவாதம், மதப் பிரச்சினைகள் மேலெழுந்தபோது நாங்களும் கூட உணர்ச்சி வசப்பட்டு பேசினோம்.எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் தவறு செய்திருந்ததாக கருதினால் பாதுகாப்புத் தரப்பினர் எம்மையும் அழைத்து விசாரிக்கலாம்.சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. அசாத் சாலியை மட்டுமல்ல நாட்டின் பாதுகாப்புக்காக எந்தவொரு குடிமகனையும் அழைத்து விசாரிக்க முடியும்.

இதே போன்ற கூற்களை     பொதுபல சேனா வெளியிட்டால்  அவர்களையும்  விசாரணை செய்ய  வேண்டும் மற்றும் நடவடிக்கை அவர்களுக்கு எதிராக எடுக்க   வேண்டும்.அசாத் சாலி, தான் அப்பாவி என்றால், அதனை நிரூபித்து அவரால் வெளியே வரமுடியும்.
இன்னொரு பக்கத்தில், முஸ்லிம் சமூகம் தம்மை ஒரு சிறப்பு குடிமக்களாக நினைத்துக் கொண்டால், அது அவர்களின் தவறு.
 இந்த நாட்டுக்கு போதைப் பொருட்கள், மாத்திரைகள், பிறப்பு கட்டுப்பாட்டு மருந்துகள், ஹெரோயின் போன்றவற்றை கொண்டு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் யார்? அதை ஆராய்ந்து பார்த்தால் தெளிவாகத் தெரியும், முஸ்லிம்கள் தான் அதன் பின்னணியில் உள்ளனர்.
அரசியல்வாதிகள் இதுபற்றி மௌனமாக இருக்கிறார்கள். பிரதான எதிர்க்கட்சியோ ஏனைய கட்சிகளோ இதுபற்றி எதுவும் பேசுவதில்லை.இதுபற்றிப் பேசினால், தமிழ், முஸ்லிம் வாக்குகளை இழந்து விடுவோம் என்று சிந்திக்கிறார்கள். நாம் அதைப் பேசினால் நெருப்பைக் கக்குகின்றனர்.
 புத்தளம்  பிரதேச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் பெண்  சிற்றூழியர்கள் முஸ்லிம் தீவிரவாதிகள்  செல்வதை கேட்டு சீருடைக்கு மேலாக கருப்பு உடையினை அணிந்து வருகிறார்கள் .
ஆசியாவின் அதிசயமாக இந்த நாட்டை மாற்ற முடியுமா என்பது எங்களுக்கு சந்தேகம்.ஏனென்றால் ஏற்கனவே இது குற்றங்களின் குகையாகி விட்டது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment