Sunday, May 19

பொதுபல சேனா அரசியலமைப்பை அவமதிக்கிறது - இந்து மாமன்றம்


இலங்கை சிங்கள பெளத்தர்களின் நாடு இதை ஏற்காதோருக்கு இங்கு இடமில்லை என பொதுபல சேனா என்ற அமைப்பு பகிரங்கமாக தெரிவித்திருப்பது நாட்டில் சமய, சமூக குரோதத்தை ஏற்படுத்தும் செயலாகும்.
அத்துடன், இவ்வாறான அறிவிப்பு இலங்கை அரசியல் அமைப்பை அவமதிக்கும் செயல் என்பதுடன் எமது சட்டங்களை மீறும் நடவடிக்கையுமாகும். எனவே இவ்வாறான பிரசாரங்களை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
கட்சியின் தலைவர் கந்தையா நீலகண்டன் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிங்களம் மட்டும் என்ற கோஷம் எழுப்பப்பட்டதால் தான் கடந்த சில தசாப்த காலமாக நாடு அழிவுப் பாதையில் இட்டுச் செல்லப்பட்டது. இத்துடன் பெளத்தம் மட்டும் என்ற பிரசாரம் முன்வைக்கப்பட்டால் நாட்டின் நிலை மேலும் மோசமடையும் என்பது உறுதி. இதை உணர்ந்து ஜனாதிபதி, பிரதம எதிர்க்கட்சித் தலைவர் உட்பட சகலரும் இவ்வாறான அபாயகரமான பிரசாரங்களுக்கு உடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் கேட்டுக் கொள்கின்றது.
இது தொடர்பில் தமிழ் பேசும் அமைச்சர்கள் உட்பட சகல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதைக் கவனத்தில் எடுத்து, இவற்றை உடன் நிறுத்த சகல வழிகளிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் உட்பட நாட்டின் சமாதானம், அமைதி வேண்டி நிற்கும் ஏனைய சகல மக்கள் சார்பிலும் அகில இலங்கை இந்து மாமன்றம் கேட்டுக் கொள்கின்றது

No comments:

Post a Comment