Sunday, May 19

வவுனியா செட்டிகுளம் அருவித்தோட்டம் வயல் வெளிகளையும் இராணுவம் தம்வசப்படுத்தியது

வவுனியா செட்டிகுளம் அருவித்தோட்டம் வயல் வெளிகளையும் இராணுவம் தம்வசப்படுத்தியது

வவுனியா செட்டிகுளம் அருவித்தோட்டம் வயல்வெளிகளை இலங்கை இராணுவத்தினர்  உரிமை கோரியுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள  செட்டிகுளம் கமநல கேந்திர நிலையத்தின் தலைவர் முகமட் அப்துல் கரிம் கரீஸ் நீண்ட காலமாக பயிர் செய்து வரும் விவசாயிகளின் வாழ்வாதரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கை என தெரிவித்துள்ளார். 
வவுனியாவில் செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அருவித்தோட்டம் என்ற கிராமத்தில் இந்தப் பிரதேச விவசாயிகளின் 400 ஏக்கர் வரையிலான வயல் நிலங்களை இராணுவத்தினர் உரிமை கோரியுள்ளனர்.

இவ்வயல் பிரதேசம் செட்டிகுளத்தை சேர்ந்தவர்களின் பரம்பரைக் காணிகளாகும். இவ்வாறான காணிகளில் இராணுவத்தினர் ‘நோ என்றி’ எனவும் ‘இராணுவ காணி’ எனவும் எழுதி காட்சிப்படுத்தியுள்ளதுடன் இக் காணிகளுக்கு உரிமை கோரியும் வருகின்றனர்.  எனினும் இக் காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை விவசாயிகள் வைத்துள்ளனர். 
எனினும் திடீரென எவ்வித முன் அறிவிப்பும் இன்றி இலங்கை இராணுவத்தினர் இந்தக்  காணிகளை சுவீகரித்தமையை விவசாயிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment