Thursday, May 16

ஜெய்லானியை பாதுகாக்கக் கோரி ஜனாதிபதிக்கு அலவி மௌலானா கடிதம்

கூரகலவில் அமைந்துள்ள தப்தர் ஜெய்லானி பிரதேசத்தை பாதுகாத்துத் தருமாறு கோரி மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஜனாதிபதிக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
ஜெய்லானியை கைப்பற்றுவதற்கும் அங்குள்ள முஸ்லிம்களின் வரலாற்றுப்புகழ்மிக்க கட்டிடங்களை அகற்றுவதற்குமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவுக்கிணங்க தொல்பொருள் திணைக்களத்தினால் கையேற்கப்பட்டுள்ள இப் பிரதேசத்தில் உள்ள கட்டிடங்கள் தற்போது அகற்றப்பட்டு வருகின்றன. 
 
எதிர்வரும் 18 ஆம் திகதி பொது பல சேனா அமைப்பினர் வாகனத் தொடரணியாகச் சென்று ஜெய்லானி பிரதேசத்தைக் கைப்பற்றப்போவதாக அறிவித்துள்ளனர்.
 
ஜெய்லானி பிரதேசத்தில் சுமார் 124 ஆண்டுகளாக முஸ்லிம்கள் தமது மத கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் ஜெய்லானி பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அறிவிக்காது இக் கட்டிடங்கள் உடைக்கப்படுவது கவலைக்குரியதாகும்.
 
எனவே இது விடயத்தில் ஜனாதிபதி உடனடியாகத் தலையிட்டு முஸ்லிம்களுக்குச் சாதகமான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment