Sunday, May 5

அரசாங்கத்தை விட்டு விலகப் போவதாக ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை

 
திட்டமிட்டவாறு வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசாங்கத்தை விட்டு விலக நேரிடும் என ஜாதிக ஹெல உறும கட்சி அறிவித்துள்ளது.
 
எவ்வாறெனினும், வட மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு முன்னதாக தங்களது கோரிக்கையான மாகாணசபைத் தேர்தல் சட்டங்களில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
 
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் மீளாய்வு செய்ப்பட வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளதோடு வடக்கில் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட சிங்கள மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளில் அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment