Monday, April 29

இவ்வாண்டு சர்வதேச குர்ஆன் போட்டிகளுக்கு பத்து பேர் தெரிவு

DSC04766
தேசிய மட்டத்தில் நடைபெற்ற அல்குர்ஆன் போட்டிகளில் பல பிரிவுகளிலும் வெற்றியீட்டிய பத்து மாணவர்கள் இவ்வாண்டு சர்வதேச குர்ஆன் போட்டிகளுக்கு செல்லவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.சமீல் நழீமி தெரிவித்தார்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசய மட்டத்திலான அல்குர் ஆன் போட்டிகள் இம் முறை காத்தான்குடியில் நடைபெற்றது.
காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரி மற்றும் ஸித்தீக்கியா அறபுக்கல்லூரி, காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபம் என்பவற்றில் இப்போட்டிகள் நடை பெற்றன.
இந்த போட்டி முடிவுகள் பின்வருமாறு

பெண்களுக்கான கிறாஅத் போட்டி (கணிஷ்ட பிரிவு)
முதலாம் இடம் :-        எப்.பாத்திமா ஸாஜிதா (தாறுஸ்தக்வா மதரசா கொழும்பு 12)
இரண்டாம் இடம் :-    கே.பாத்திமா பக்கீனா (ஜாமியுஸ் ஸித்தீக்கியா அறபுக்கல்லூரி, காத்தான்குடி)
மூன்றாம் இடம் :-       எம்.என்.எப்.றிஸ்லா (பெண்கள் அறபுக் கல்லூரி கல்லெலிய)
பெண்களுக்கான கிறாஅத் போட்டி (சிரேஷ்ட பிரிவு)
முதலாம் இடம் :-       எம்.யு.எஸ்.சனிறா (திஹாரியா)
இரண்டாம் இடம் :-    எச்.கே.ஆர்.வஜீஹா (கொழும்பு 12)
மூன்றாம் இடம் :-       வஸனி அமால் (கொழும்பு12)
கிறாஅத் போட்டி ஆண்கள் (கணிஷ்ட பிரிவு)
முதலாம் இடம் :-       எம்.ஆர்.எம்.றஸ்மின்
இரண்டாம் இடம் :-    எம்.ஐ.எம்.அஸ்பாக் (தம்பதெனிய அக்குறனை)
மூன்றாம் இடம் :-       எம்.எஸ்.சிகாப் அக்கீல்ஸ் (ஜாமியத்துல் றஹ்மானிய்யா அக்குறனை)
கிறாஅத் போட்டி ஆண்கள் (சிரேஷ்ட பிரிவு)
முதலாம் இடம் :-        எம்.அமீர் ஹுஸைன் (ஹிந்தோட்ட காலி)
இரண்டாம் இடம் :-     எம்.எச்.முன்சிப் (அக்குறனை)
மூன்றாம் இடம் :-       ஏ.எல்.முஸம்மில் (வாழைச்சேனை)
குர்ஆன் மனனப்போட்டி ஆண்கள் (கனிஷ்ட பிரிவு)
முதலாம் இடம் :-        ஏ.எச்.எம்.அர்க்கம்(கிருளப்பன)
இரண்டாம் இடம் :-    எம்.ஏ.உமர் (கொழும்பு 02)
மூன்றாம் இடம் :-       முகம்மட் லாபிர் (மாவனல்ல)
குர்ஆன் மனனப்போட்டி ஆண்கள் (சிரேஷ்ட பிரிவு)
முதலாம் இடம் :-     எம்.எம்.யூசுப் (தஸ்கர கண்டி)
இரண்டாம் இடம் :-   கே.எம்.யாசீர் (அத்துளுகம)
மூன்றாம் இடம் :-       எம்.யு.எம்.அஸீம் (ஹனகின்ன)
குர்ஆன் மனனப்போட்டி பெண்கள்
முதலாம் இடம் :-       எஸ்.றஸானா (ஏறாவூர்)
இரண்டாம் இடம் :-    இசட்.எப்.சம்ஹரீரா (ஏறாவூர்)
மூன்றாம் இடம் :-      ஏம்.சித்தீக்கா பர்வீன் (கற்பிட்டி)

No comments:

Post a Comment