Friday, April 5

பரவிவரும் தவறான குறுந்தகவலை நம்பாதீர்: நுவரெலியா பள்ளிவாசல்






இப்புத்தாண்டு காலப்பகுதியில் நுவரெலியாவுக்கு நாட்டில் ஏனைய பிரதேசங்களிலிருந்து முஸ்லிம்கள் சுற்றுலா வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு நுவரெலியா பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொள்வதாக பரவி வரும் குறுந்தகவல் முற்றிலும் பொய்யானது எனவும் அதனை எவரும் நம்ப வேண்டாம் எனவும் நுவரெலிய பெரிய பள்ளிவாசலின் நிர்வாக சபை தலைவரும் நுவரெலிய பிரதேச சபை உறுப்பினருமான முஹம்மட் பழீல் விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.
குறித்த குறுந்தகவலை நிராகரிக்கும் விதமாக தாம் இன்னுமொரு குறுந்தகவலை தயாரித்து அதனை அனைவருக்கும் அனுப்பி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விரும்பத்தகாத நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக இப்பருவகாலத்தில் நாட்டில் ஏனைய பிரதேசங்களிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா வருவதை முஸ்லிம்கள் தவிர்க்குமாறு நுவரெலியா பள்ளிவாசல் கேட்டுக்கொள்கிறது என குறித்த குறுஞ்செய்தி ஒன்று நாடளாவிய ரீதியில் பரவி வருகிறது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எனினும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக யாரோ ஒருவர் இதனை செய்திருப்பதாகவும் தாம் இந்த குறுந்தகவலை முற்றாக நிராகரிப்பதாகவும் நுவரெலியா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் மேலும் தெரிவித்தது.

No comments:

Post a Comment