Wednesday, April 17

சர்வதேசத்தை நோக்கி பொது பல சேனா : அலுவலகங்கள் அமைக்கவும் தீர்மானம்

 
பெளத்த அமைப்பான பொது பல சேனா அமைப்பானது தமது நடவடிக்கையினை சர்வதேச ரீதியாக விஸ்தரிக்க தீர்மானித்துள்ளதாக அவ்வமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டிலந்த விதானகே தெரிவித்தார்.
 
இதன் பொருட்டு அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் அலுவலகங்களை மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
 
 
சர்வதேச ரீதியாக பெளத்தர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து பொது பல சேனா இதன் பிறகு செயற்படுமெனவும், பெலத்தர்களுடனான சிறந்த உறவினை வளர்க்க இவ்வாறான அலுவலகங்கள் துணை புரியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
 
அத்துடன் அலுவலகங்கள் அமைக்கப்படவுள்ள நாடுகளில் பெளத்தர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
இதனிடையே தமிழர்களுடனான உறவுகளை பலப்படுத்த யாழ்ப்பாணத்தில் பொது பல சேனா அமைக்கவுள்ளதாக கூறப்படும் அலுவலகம் தொடர்பான விஷேட கலந்துரையாடலொன்று நாளை அவ்வமைப்பின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.
 
இதில் வடக்கிலிருந்து இரண்டு பிரதி நிதிகள் கலந்துகொள்ளவுள்ளநிலையில் யாழ். அலுவலகம் குறித்து விஷேட தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என தெரியவருகிறது.

No comments:

Post a Comment