Thursday, April 18

பொது பல சேனா அமைப்பின் கிளை கல்முனையில்

kalmunaiகடும்போக்கு பெளத்த அமைப்பான பொது பல சேனா அமைப்பு விரைவில் கல்முனையில் அதன் கிளை ஒன்றை அமைக்கவுள்ளது . கல்முனையில்    அலுவலகம் ஒன்றை திறக்குமாறு குறித்த பிரதேசத்தின் சில தமிழ் மக்கள் தம்மை கோரியுள்ளதாக  பிரதம நிறைவேற்று அதிகாரியான டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கல்முனை மாநகர சபை பொது பல சேனாவை கண்டித்து அதை தடைசெய்யுமாறு கோரும் பிரேரணை ஒன்றை அண்மையில் ஏகமனதாக நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க சென்றுள்ள அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானஸார தேரர் உட்பட ஏனையவர்கள் நாடு திரும்பியதும் அது தொடர்பில் கலந்துரையாடப் படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பொது பல சேனாவின்  கிளை ஒன்று  யாழ்பாணத்தில் விரைவில் திறக்கப்படவுள்ளது . இது தொடர்பாக அமைப்பின் யாழ்ப்பாண  பிரதிநிதிகளுடனான   கலந்துரையாடல் ஒன்று நாளை  வியாழக்கிழமை 18.04.2013 அன்று   கொழும்பில் இடம்பெறவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் . அதில் யாழ்பாணத்தில் இருந்து இரு தமிழர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .
பொது பல சேனாவின்  பொது செயலாளர் கலகொட அத்தே ஞானஸார தேரர்  இனிமேல் ஊடகங்களுக்கு அறிக்கை வழங்கும் அதிகாரம் இல்லை என்றும், அந்த அதிகாரம் உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் அதன் உயர் பீட உறுப்பினர் திலந்த விதானகேவுக்கு கையளிக்கப்பட்டுள்ளது என வெளியான தகவலையும் அவர் மறுத்துள்ளார்.

No comments:

Post a Comment