Sunday, April 7

நிந்தவூர் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

4

நிந்தவூர்ப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் நிந்தவூர் மாவட்டத் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேற்று (04.04.2013) நடைபெற்றது.
அபிவிருத்திக் குழுக் கூட்ட இணைத்தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான எம்.ரி.ஹஸன் அலி, எம்.சீ. பைசால் காசீம் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் அதாஉல்லாவின் இணைப்புச் செயலாளர் ஏ.பீ.தாவூத், மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீல், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.சுல்பிகார், பிரதேச சபைத் தலைவர் ஏ.எம்.தாஹீர், எதிர்க் கட்சித் தலைவர் வை.எல்.சுலைலெவ்வை, சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தஹநாயக்க, நிந்தவூர் மாவட்ட வைத்திய அதிகாரி எம்.சீ.எம்.மாஹீர், பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி. டாக்டர்.தஸ்லிமா மஜீட், கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம்  உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், விவசாயம், மீன்பிடி, நீர்பாசனம், வடிகான், வீதி அபிவிருத்தி, மின்சாரம், பாதுகாப்பு போன்ற பல்வேறு விடயங்கள் அத்திணைக்களத் தலைவர்களுடன் இணைந்து ஆராயப்பட்டு, அவற்றை நிவர்த்திப்பதற்கான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.
இதே வேளை தேசத்திற்கு மகுடம் வேலைத் திட்டத்தின் கீழ் நிந்தவூர்ப் பிரதேச அபிவிருத்தியிற்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 33 மில்லியன் செலவிலான வேலைகளை உடன் ஆரம்பித்து, தொடராக செய்து முடிப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது.
2
51

No comments:

Post a Comment