Saturday, April 6

முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்களுக்குத் தடை : ரிஸ்வி பாரூக் கவலை

மத்திய மாகாண சபைக்குட்பட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கு தமிழ் ஆசிரியர்களை புதிதாக நியமிக்கவோ, இடமாற்றம் செய்யவோ கூடாது என மத்திய மாகாண சபைக்குட்பட்ட தமிழ் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அதிகாரிகள் சிலர் தீர்மானித்திருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக் தெரிவித்தார்.
மத்திய மாகாண சபையின் கூட்டத் தொடர் இன்று 05-04-2013 சபைத் தவிசாளர் சாலிய திசாநாயக தலைமையில் நடைபெற்றது. தனிப்பட்ட விவகாரங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக் அங்கு இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், இலங்கையில் இன்று இனவாதத்தை விதைத்து சமூகங்களுக்கிடையே பிரச்சினையை உண்டு பண்ணவும் அதனைக் கொண்டு எமது நாய் நாட்டை ஸ்தீரமில்லாத நிலை ஒன்றைத் தோற்றுவிப்பதற்கும் பல்வேறு சக்திகள் இயங்கிக் கொண்டிருக்கும் போது இவ்வதிகாரிகளின் இவ்வகையான தீர்மானங்களால் இந்நாட்டை எங்கே கொண்டு போய் சேர்க்கும் என்பதில் எமக்குப் பாரிய கேள்விக் குறி எழுந்துள்ளது எனவே மத்திய தமிழ் கல்வி அமைச்சுக்கும் முஸ்லிம் கல்விக்கும் பொறுப்பாக இருக்கின்ற முதல் அமைச்சரும் இந்த விடயத்தில் விசேட கவனம் எடுத்து இனங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் இவ்வகையான தீர்மானங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் அல்லது இவ்வாறு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் தமிழ் ஆசிரியர்களை முஸ்லிம் பாடசாலைக்கு இடமாற்றம் செய்வதைத் தடுப்பது போல் பெருமளவு தமிழ் பாடசாலைகளிலுள்ள முஸ்லிம் ஆசிரியர்களுக்கும் உடனடியாக பெரும் ஆசிரியர் பற்றாக்கு குறையுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு துரித கதியில் இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment