Wednesday, February 27

ஜம்மியதுல் உலமா அடிக்கடி முரணான கருத்துக்களை வெளியிடுகிறது - பொதுபல சேனா



உலகில் எந்த ஒரு நாட்டிலும் அரசாங்கத்தின் மூலம் ஹலால் சான்றிதழ் விநியோகிக்கப்படுவதில்லை. எனவே, ஹலால் சான்றிதழ் விநியோகிப்பதை அரசுக்கு வழங்குவது பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என பொதுபலசேன தெரிவிக்கிறது.

அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் திலந்த விதானகே, ஜம்மியதுல் உலமா அமைப்பு அடிக்கடி ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது என குறிப்பிடுகிறார்.

ஹலால் சான்றிதழ் விநியோகிப்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை என்று கூறிய ஜம்மியதுல் உலமா அமைப்பு, பிறகு முஸ்லிம்களுக்கு மாத்திரம் விநியோகிக்கப் போவதாகக் கூறியது. நேற்று இதனை அரசுக்கு வழங்குவதாக கூறுவதன் மூலம் அவர்களின் நிலைப்பாடுகள் குறித்து கேள்வி எழுவதாகவும் திலந்த விதானகே சுட்டிக் காட்டுகிறார்.

அரசாங்கத்தோடு எவ்வித பேச்சுவார்த்தையும் நடாத்தாது இப்படி அரசாங்கத்தின் பக்கம் தள்ளிவிடுவதால் பிரச்சினை தீராதென சுட்டிக்காட்டும் பொதுபலசேன அமைப்பு தாம் மத உரிமைகளை மதிப்பதாகவும் இது குறித்த தெளிவான பேச்சுவார்த்தை ஒன்றின் பின் தீர்வொன்றை பெற வேண்டும் எனவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

No comments:

Post a Comment