Wednesday, April 25

தம்புள்ளை புனித பூமியில் ஒருபோதும் பள்ளிவாசல் இருக்கவில்லை: ஹெல உறுமய



ரங்கிரி தம்புள்ளை புனித பூமி பிரதேசத்திற்குள் உள்ள பள்ளிவாசல், ஒரு பள்ளிவாசல் அல்ல எனவும் அங்கு பள்ளிவாசல் அமைப்பதற்கு அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறவில்லை எனவும் ஜாதிக ஹெல உறுமய கூறியுள்ளது.

1962 ஆம் ஆண்டு அப்பகுதியிலிருந்த வர்த்தகர் ஒருவருக்கு கடையொன்றை நிர்மாணிப்பதற்காக காணி வழங்கப்பட்டது என ஜாதிக ஹெல உறுமய தலைவர் வண. ஒமல்பே சோபித தேரர் கூறினார்.

'ஆனால் அவர் அங்கு வீடொன்றை அமைத்தார். சில வருடங்களின் பின்னர், சமய நடவடிக்கைகளுக்காக பிரிதொரு அறையை அமைத்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ 1982 ஆம் ஆண்டு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்தவேளை, அவர் 300 ஏக்கர் பகுதியை புனித பூமியாக முன்மொழிந்தபோது அக்காணி பெறப்பட்டது. அப்போது அது ஒரு மத நிலையமாக குறிப்பிடப்படவில்லை.

இக்காணியில் சட்டவிரோதமாக பள்ளிவாசல் அமைக்கப்படுவதாக தம்புள்ளை விகாராதிபதி வண. இனாமுலுவ சுமங்கல தேரர் அதிகாரிகளுக்கு அறிவித்தார். ஆனால் அதிகாரிகள் எவரும் அதை கவனிக்கத் தவறிய நிலையில், அதற்கு எதிராக அப்பகுதியிலுள்ள பிக்குகள் மக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு வீதிக்கு வந்தனர்.

அக்குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமான காணியில் தேவாலயமொன்று நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?

அவர்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையிடமோ, மாவட்ட செயலாளரிடமோ, தம்புள்ளை மாநரசபையிடமோ இதற்கு அனுமதி பெறவில்லை' என அவர் கூறினார்.

இதேவேளை, பௌத்தர்கள் சுதந்திரத்தையும் எந்த சமயத்தையும் பின்பற்றுவதற்கான உரிமையையும் மதிப்பதால் இலங்கையில் சமய சுதந்திரம் உள்ளது' என மேல் மாகாண சபை அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.

'நாம் அனைவரும் ஒரே சட்டத்தின்கீழ் உள்ளோம். அதற்கு சமயம் ஒரு தடையாக அமையக்கூடாது' என அவர் கூறினார்.

No comments:

Post a Comment