Thursday, July 21

இருமொழி பாடசாலைகள் ஆயிரம் இவ்வருடம்

 கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இருமொழி பாடசாலைகள் திட்டத்தின் கீழ் இவ்வருடம் நாடுதழுவிய ரீதியில் 1000 பாடசாலைகளில் இருமொழி போதனைக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக திட்டத்திற்கு பொறுப்பான கல்விப் பணிப்பாளர் பிரியதா நாணயக்கார தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் 75 பாடசாலைகளும், ஊவா மாகாணத்தில் 75 பாடசாலைகளும், மேல்மாகணத்தில் 240 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 125 பாடசாலைகளும், மத்திய மாகாணத்தில் 135 பாடசாலைகளும், வடக்கு, சப்ரகமுவ, தென் மாகாணங்களில் தலா 100 பாடசாலைகளும், வடமத்திய மாகாணத்தில் 50 பாடசாலைகளும், உள்ளடக்கப்படவுள்ளன.

நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளிலும், மாகாண சபைகளினால் நிருவாகிக்கப்படும் சகல மத்திய மகா வித்தியாலயங்களிலும் இருமொழி பாடசாலை திட்டத்தை அறிமுகம் செய்ய கல்வி அமைச்சு எதிர்பார்ப்பதாகவும் மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணங்களில் இப்பாடசாலைகளை அறிமுகம் செய்வதில் கூடுதலான ஆர்வம் காட்டப்படுவதாக அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment