Friday, June 17

குரங்கை விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்யும் ஈரான்

[ வெள்ளிக்கிழமை, 17 யூன் 2011, 06:29.18 மு.ப GMT ]

ராசாத்-1 என்ற செயற்கைகோளை ஈரான் தயாரித்துள்ளது. இதை மலேக் ஆங்தார் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது.
இந்த செயற்கைகோள் கவோஸ்கர்-5 என்ற ராக்கெட் மூலம் வருகிற ஜூலை 23ந் திகதிக்கும், ஆகஸ்டு 23ந் திகதிக்கும் இடையே விண்வெளியில் செலுத்தப்பட உள்ளது.
இந்த செயற்கைகோளை கடந்த பெப்பிரவரி மாதம் ஈரான் அதிபர் மகமூத் அகமதின் ஜாதி அறிமுகப்படுத்தினார். 285 கிலோ எடையுள்ள இந்த செயற்கைகோளில் ஆராய்ச்சிக்காக குரங்கை வைத்து அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கு தகுந்தாற்போல் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வருகிற 2020ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்ப ஈரான் முடிவு செய்துள்ளது. அதற்கு முன்னதாக விலங்குகளை அனுப்பி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த ஆண்டு எலி, ஆமைகள், மற்றும் புழு, பூச்சிகளை கவோஸ்கர்-3 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக தற்போது குரங்கு அனுப்பப்பட உள்ளது.
இந்த தகவல் ஈரான் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு டெலிவிஷன் தெரிவித்தது.

No comments:

Post a Comment