Thursday, June 27

பொலி­ஸாரின் அறி­வித்­தலையடுத்து பம்­ப­லப்­பிட்டியில் இறைச்சி வகைகள் ஒளித்து வைப்பு

  
 
 
 
 
 
 
 
 
 
 
மாடு­ வெட்­டு­வதை தடை­செய்­யு­மாறும் மத­மாற்றச் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­மாறு கோரி சிங்­கள ராவய அமைப்பு கதிர்­கா­மத்தில் ஆரம்­பித்த பாத­யாத்­திரை நேற்று கொழும்பில் முடி­­வ­டைந்­தது. கடந்த வாரம் கதிர்­கா­மத்­தி­லி­ருந்து சிங்­கள ராவய அமைப்­பினர் கொழும்பு நோக்­கிய பாத­யாத்­தி­­ரை­யினை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.
இவர்கள் நேற்று பாணந்­து­றை­யி­லி­ருந்து கொழும்பு வரை யாத்­தி­ரை­யாக வந்து அல­ரி­மா­ளிகை ஜனாதி­பதி மஹிந்­த­ரா­ஜ­பக்­ஷ­விடம் கைய­ளிப்­ப­தற்­கான மக­ஜரை சமர்ப்­பித்­துள்­ளனர்.
பாணந்­து­ரை­யி­லி­ரு­ந்து அல­ரி­மா­­ளிகை வரை காலி­வீ­தியால் இவர்கள் பாதை­யாத்­தி­ரை­யாக வந்­த­தை­ய­டுத்து பம்­ப­லப்­பிட்டிப் பகு­தி­யி­­லுள்ள முஸ்லிம் உண­வ­கங்­க­ளுக்கு சென்ற பொலிஸார் கடை­களில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டிருந்த கோழி இறை உட்­பட இறைச்சி வகை­களை ஒளித்து வைக்­கு­மாறு அறி­வு­றுத்­தி­யி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
பொலி­ஸாரின் அறி­வித்­தலை அடுத்து பம்­ப­லப்­பிட்டி சந்­திப்­ப­கு­தியில் அமைந்­தி­ருந்த உண­வ­கங்­களில் பொறித்த கோழி இறைச்சி உட்­பட இறைச்சி வகைகள் ஒளித்து வைக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
இதே­வேளை பாத­யாத்­தி­ரையில் ஈடு­பட்­ட­வர்­களில் சிலர் பொல்­லு­க­ளு­டனும் கலந்து கொண்­ட­தா­கவும், தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

No comments:

Post a Comment