Sunday, June 30

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உச்ச பீட கூட்டத்தை அதன் 4 எம்.பி.களும், 4 எம்.பி.சி. களும் பகிஷ்கரிப்பு

 
 
 
 
 
 
 
 
 
13 வது திருத்தச்சட்டமூலம் மற்றும் பாராளுமன்ற தெரிவுக்குழு விவகாரம் தொடர்பாக ஆராயும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உச்ச்பீட கூட்டம் தற்பொழுது இடம்பெற்றது. இந்த அவசர கூட்டத்தில் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்தலிப் பாருக், தௌபீக், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.சீ.பைசால் காசிம் ஆகியோரும், மாகான அமைச்சர்களான ஹாபிஸ் நஸீர், எம்.ஐ.எம்.மன்சூர், மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஹசன் மௌலவி ஆகியோரே கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவருகிறது.


இக்கூட்டத்தில், 13 வது திருத்த சட்டமூலத்தை திருத்தும் மசோதா மாகாணசபையில் வரும் பட்சத்தில் அதற்க்கு

எதிராக வாக்களிக்குமாறு எழுத்து மூலம் மு.கா. மாகாணசபை உறுப்பினர்களை கோருவது எனவும், கிழக்கு மாகாணசபையில் இத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மசோதா ஒன்றை முஸ்லிம் காங்கிரஸ் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், உச்சபீட உறுப்பினருமான கே.எம்.ஏ. ரசாக் (ஜவாத்)  தெரிவித்தார்.

No comments:

Post a Comment