Sunday, June 30

கிழக்கு, மேல் மாகாணங்களில் 13 குறித்த பிரேரணையை கடுமையாக எதிர்ப்போம் - ஹஸன் அலி

13 ஆவது திருத்தச் சட்­டத்தில்  திருத்­தங்­களை  மேற்­கொள்­வ­தற்கு  அங்­கீ­காரம் வழங்கும் வகையில் கிழக்கு  மாகாண சபையில்   பிரே­ரணை  முன்­வைக்­கப்­படும் போது   அதனை சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ்  எதிர்க்கும்.  அத்­துடன் வாக்­கெ­டுப்பின் போது  எமது கட்­சியின் உறுப்­பி­னர்கள்  பிரே­ர­ணைக்கு எதி­ரா­கவே  வாக்­க­ளிப்­பார்கள்  என்று  அக்­கட்­சியின் செய­லா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான  எம்.ரீ.ஹசன் அலி  தெரி­வித் தார். 
 
இதேபோல் மேல் மாகா­ண­ச­பையில்  இந்தப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­ப­டும்­போதும் எமது உறுப்­பி­னர்கள் அதற்கு எதி­ரா­கவே  வாக்­க­ளிப்­பார்கள். 13 ஆவது திருத்தச் சட்­டத்தில் திருத்­தங்­களை  மேற்­கொள்­வ­தற்கு  அனு­ம­திக்க  முடி­யாது என்றும்  அவர்  சுட்­டிக்­காட்­டினார்.
 
13 ஆவது திருத்தச் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்ளும் வகையில் மாகா­ண­ச­பை­களின்  அங்­கீ­கா­ரத்தை பெறும்  நட­வ­டிக்­கையில் அர­சாங்கம்  ஈடு­பட்­டுள்­ளது.  இது­வரை  வடமேல் மாகா­ண­சபை, தென்­மா­கா­ண­சபை,  வட­மத்­திய மாகா­ண­சபை , சப்­பி­ர­க­முவ மாகா­ண­சபை, மத்­திய மாகா­ண­சபை மற்றும் ஊவா மாகாண சபை­களில்  இந்தப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக  தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.
 
மேல்­மா­கா­ண­சபை  மற்றும் கிழக்கு  மாகா­ண­சபை என்­ப­வற்றில்  அடுத்­த­வாரம் அளவில்  இந்தப் பிரே­ரணை முன்­வைக்­கப்­படும் என  எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இந்த நிலை­யி­லேயே முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் ஹசன் அலி  மேற்­கண்­ட­வாறு  தெரி­வித்­தி­ருக்­கின்றார்.
 
இது குறித்து அவர்   மேலும்   கருத்துத் தெரி­விக்­கையில்:-
 
குறித்த பிரே­ரணை கிழக்கு மற்றும் மேல் மாகா­ணங்­களில் வாக்­கெ­டுப்­புக்கு விடப்­படும் போது, முஸ்லிம் காங்­கிரஸ் அந்த வாக்­கெ­டுப்பை புறக்­க­ணிக்கும் என்று செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன. அதில் எவ்­வித உண்­மையும் இல்லை. நாம் இப் பிரே­ர­ணையை முற்­றாக எதிர்த்­து­வரும் நிலையில்  கடந்த புதன்­கி­ழமை வடமேல் மாகாண சபையில்  கட்­சியின் நிலைப்­பாட்­டுக்கு புறம்­பாக  இரண்டு உறுப்­பி­னர்கள் ஆத­ரித்து வாக்­க­ளித்­துள்­ளனர். இதன்­கா­ர­ண­மாக அவர்­களை நாம் தற்­கா­லி­க­மாக கட்­சி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தி­யுள்ளோம். கிழக்கு மற்றும் மேல் மாகா­ணங்­களில் வாக்­கெ­டுப்பை புறக்­க­ணித்­து­விட முடி­யாது. எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் ஒரே நிலைப்­பாட்­டையே கடை­பி­டிக்க வேண்­டி­யுள்­ளது.
 
குறித்த பிரே­ரணை  அடுத்­த­வா­ர­ம­ளவில் மேல் மாகாண சபையில் வாக்­கெ­டுப்பு விடப்­ப­டலாம் என எதிர்­பார்க்­க­டு­கின்­றது. மேல் மாகா­ணத்தில் முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் முன்று மக்கள் பிர­தி­நி­திகள் உள்­ளனர். அவர்கள்  குறித்த பிரே­ர­ணையை எதிர்த்து வாக்­க­ளிப்பர்.
 
அத்­தோடு கிழக்கு மாகாண சபையின் கடந்த சில அமர்­வுகள் சீராக இடம்­பெ­ற­வில்லை. 13 ஆவது திருத்தம் தொடர்­பி­லான குறித்த திருத்த பிரே­ரணை கிழக்கு மாகாண சபையின் அங்­கீ­கா­ரத்­தைப்­பெற வேண்­டி­யுள்­ளது. அவ்­வாறு பிரே­ரணை கொண்டு வரப்­பட்டு வாக்­க­ளிப்­புக்கு விடப்­பட்டால் மு.கா கட்­டாயம் எதிர்த்தே  வாக்களிக்கும் என்றார்.

No comments:

Post a Comment