Friday, May 17

பள்ளிகளை உடைக்கும் வரை பொறுமையோடு இருப்பதா: நிர்வாகிகள் ஆதங்கம்

jeylaniதம்புள்ளை பள்ளி, ஜெய்லானி பள்ளி விவகாரங்கள் தொடர்பில் முஸ்லிம் தலைமைகள் மௌனம் காத்து வருவது குறித்து முஸ்லிம்கள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.
தம்புளைப் பள்ளி தவிர்ந்த, சுற்றியுள்ள கடைகள், குடியிருப்புக்கள் மாத்திரம் எஞ்சியுள்ளன. அதேபோன்று ஜெய்லானி பள்ளிக்குச் சொந்தமான பழமை வாய்ந்த அனைத்துக் கட்டிடங்களும் அகற்றப்பட்டு விட்டன. பள்ளி மாத்திரமே அங்கும் எஞ்சியுள்ளது.
தம்புள்ளை பள்ளி நிர்வாகமும் முக்கியஸ்தர்களும் தமது பள்ளி விவகாரம் குறித்து ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், முஸ்லிம் அமைச்சர்களுக்கு அறிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
அதேபோன்று ஜெய்லானி பள்ளி நிர்வாகமும் தமது பாரம்பரிய கட்டிடங்கள் முன்னறிவிப்பின்றி அகற்றப்படுவது குறித்தும், பள்ளி வாசலின் இருப்பு தொடர்பாகவும் பாதுகாப்புச் செயலாளர், முஸ்லிம் தலைமைகளுக்கு அறிவித்தும் எத்தகைய நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமை குறித்தும் கவலை தெரிவிக்கப்படுகிறது.
தம்புள்ளை,ஜெய்லானி பள்ளி விவகாரங்கள் பற்றி உலமா சபை, உரிய தலைமைகளுக்கு நிர்வாகத்தினர் எடுத்துக் கூறும் சந்தர்ப்பங்களில் பொறுமை காட்டுங்கள் (ஸபூர் செய்யுங்கள்) எனக் கூறப்படுகிறதே தவிர நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. எவ்வளவு காலத்துக்குப் பொறுமை காப்பது, எல்லாவற்றையும் உடைக்கும் வரை பொறுமை காத்துக் கொண்டிருப்பதா என்றும் தம்புள்ளை, ஜெய்லானி பள்ளி நிர்வாகிகள் கேள்வியெழுப்புகின்றனர்.

No comments:

Post a Comment