Wednesday, May 1

மீண்டும் வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிறது இலங்கை!

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து, இலங்கைப் படைகள் போரில் ஈட்டிய வெற்றியை நினைவு கொள்ளும், வெற்றி விழாக் கொண்டாட்டங்களுக்கு இலங்கை தயாராகி வருகிறது.
இலங்கைப் படையினரால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட மே 19ம் நாளன்று ஆண்டுதோறும் இலங்கையில் வெற்றி நாள் அணிவகுப்பு மற்றும் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

நான்காவது ஆண்டாக வரும் மே 19ம் நாள் நடத்தப்படவுள்ள இந்த வெற்றிநாள் கொண்டாட்டத்துக்கு இப்போதே கொழும்பு தயாராகத் தொடங்கியுள்ளது.

வெற்றிநாள் அணிவகுப்பின் ஒத்திகை இன்று தொடக்கம் காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது.

இதற்காக நேற்று காலை 9.30 மணி தொடக்கம் 11 மணி வரை காலிமுகத்திடல் சுற்று வட்டத்தில் இருந்து பழைய நாடாளுமன்றக் கட்டடம் வரையிலான வீதி மூடப்பட்டிருந்தது.


இந்த வெற்றி நாள் கொண்டாட்டங்கள் தமிழர்களின் மனதைப் புண்படுத்துவதாகவும், இனநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இத்தகைய கொண்டாட்டங்களை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகின்ற போதிலும், சர்வாதிகார போக்குடைய இலங்கை அரசாங்கம் இதனை ஒரு தேசிய நாளாக பிரகடனம் செய்து கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment