Saturday, May 18

ஜாதிக ஹெல உறுமயவின் பிரேரணை: மஹிந்த- ரணில் சிக்கலில்

1வடக்கு மாகாண சபை தேர்தலுக்கு முன்னதாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை தாக்கல் செய்யவுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய இருவருக்கும் சிக்கல் தோன்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் உயர்மட்ட தகவல்களை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜ பெருமாள், விடுதலைப் புலிகள் மற்றும் இந்தியாவின் உதவியுடன் வடக்கில் தனியான பொலிசாரை நியமித்தார்.

இதேபோன்று வடக்கு தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறும் பட்சத்தில், அது மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உயிர்ப்பினை வழங்கிவிடும் என்ற நிலையில், எதிர்வரும் தேர்தலுக்கு முன்னதாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய கோருகிறது.
இந்த நிலையில் தாம் தாக்கல் செய்யவுள்ள பிரேரணைக்கு கட்சிகளின் உறுப்பினர்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று கட்சித் தலைவர்களிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் செய்வதறியாது இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே மக்கள் சுதந்திர முன்னணியும், சில அடிப்படை வாத கட்சிகளும் 13ம் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில், இந்த பிரேரணை நிறைவேற்றப்படுமாக இருந்தால், அது அரசாங்கத்துக்கு பாரிய சிக்கலை தோற்றுவிக்கும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment