Tuesday, May 21

இன்றைய போராட்டத்தை தோற்கடிப்போம்: அரசாங்க தொழிற்சங்கங்கள் சவால்

Protestமின்சாரக் கட்டண அதிகரிப்பினை ஆட்சேபித்து இன்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சிகளின் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்து பொது வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த போராட்டத்தில் சுமார் 941 தொழிற்சங்கங்கள் இணைந்துகொள்ள இணக்கம் தெரிவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.
நீண்ட இடைவெளிக்குப் பின் இவ்வாறான வேலை நிறுத்தமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தாங்கள் இதில் கலந்துகொள்ளாது தோற்கடிப்போமென அரசாங்க தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இலங்கை புகையிரத திணைக்களத்தின் ஒரு ரயில் சேவையையாவது மேற்படி தொழிற்சங்க போராட்டத்தின்மூலம் நிறுத்திக்காட்டுங்கள் என சவால் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில், பாடசாலை நடவடிக்கைகள் வழமைபோன்று நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றை காலை நிலவரப்படி கொழும்பில் அனைத்து நடவடிக்கைளும் வழமைபோன்று நடைபெற்று வருகின்றன. போராட்டங்கள் எதுவும் நடைபெற்றதாக இதுவரை செய்திகள் பதிவாகவில்லை. அரசாங்க மற்றும் தனியார் பஸ்கள் வழமைபோன்று இன்று சேவையில் ஈடுபட்டுள்ளன.
சில தனியார் பேரூந்துகள் நேற்றுமுன்தினம் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவற்றுக்கான அனுமதிப் பத்திரங்களை ரத்துச் செய்யவுள்ளதாகவும் தனியார் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த போராட்டத்தில் கலந்து கொள்வோருக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கு சட்டரீதியாக அணுகவேண்டிவருமென சட்டத்தரணிகள் ஒன்றியம் அறிவித்துள்ளது.
இந்தப் போராடாட்டத்தை எந்த வகையிலும் சட்டவிரோதமாக கருதமுடியாது. போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் இலவச அடிப்படையில் நீதிமன்றில் ஆஜராகி அவர்களுக்காக குரல்கொடுப்போம் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment