Tuesday, May 7

அசாத் சாலி சார்பில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்


aasath saliகுற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள  முன்னாள் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் அஸாத் சாலியின் சார்பில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவினாலேயே இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன், குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் காமினி மத்துரட்ட, உப-பொலிஸ் இன்ஸ்பெக்டர் லசந்த ரத்னாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடந்த 27 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அசாத் சாலியை மூன்று மாதங்களுக்கு தடுத்து வைப்பதற்கான உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

No comments:

Post a Comment