Tuesday, May 7

ஐக்கிய தேசிய கட்சிக்கு றிசாத் பதியுதீன் செல்வாரா..? ஜனாதிபதி மஹிந்தவுக்கு சந்தேகம்


ஜனாதிபமி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று புதன்கிழமை பாராளுமன்ற குழுக கூட்டம் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் றிசாத் பதியுதீன், வடக்கு முஸ்லிம்களை அன்று புலிகள் துரத்தி அடித்ததாகவும், தற்போது இராணுவம் வடக்கு முஸ்லிம்கள் மீது பல்வேறு கெடுபிடிகளை மேற்கொள்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதுவரை வடக்கு முஸ்லிம்களின் நலனுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்ட ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எவையெனவும் கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன் வடக்கு முஸ்லிம்கள் அரசாங்கத்தின் நிவாரணங்களை நம்பியிருக்கவில்லையெனவும், அவர்கள் அடிப்படை உர்மைகளில் ஒன்றான இருப்பிடத்தையே எதிர்பார்ப்பதாகவும், அந்த இருப்பிட வசிதிகளை ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லையெனவும் அமைச்சர் றிசாத் ஆத்தரத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இனவாத. சிங்கள இனவாத அதிகாரிகள் இணைந்து வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கமுயலுவதாகவும், புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் உருவாகியுள்ள சமாதான சூழ்நிலையை அனுபவிக்க முடியாதவர்களாக முஸ்லிம்கள் காணப்படுவதாகவும், பௌத்தசிங்கள போனிவாதிகளின் அச்சுறுத்தல் தென்னிலங்கையில நீடிப்பதாகவும், ஒட்டுமொத்தத்தில் இலங்கை முஸ்லிம்கள்இந்த அரசாங்கம் அரசாங்கம் மீது ஆத்திரரத்துடன் காணப்படுவதாகவும் அமைச்சர் றிசாத் மேலும் தெரிவித்துள்ளார்,
வேறு அமைச்சர்களும் மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி ஜனாதிபதியின் கவனத்திறங்கு கொண்டுவந்துள்ளனர்.
இந்நிலையில் பாராளுமன்ற குழுக்கூட்டம் நிறைவடைந்து வெளியேறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சர் றிசாத் பதியுதீனை நோக்கி, ஏன் இப்போது என்னை பார்த்து நீங்கள் சிரிப்பது இல்லை? முறைக்கிறீர்கள். என்னைவிட்டு விட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் போய் இணையப் போகிறீர்களா என்று வினா தொடத்துவராக அங்கிருந்து அகன்று சென்றுள்ளதாக அறியவருகிறது.

No comments:

Post a Comment