Wednesday, May 15

மாகாண சபையின் ஆறு அதிகாரங்களை நீக்கிவிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

gunadasa_amarasekaraவட மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு முன்னர் தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாண சபைக்குரிய ஆறு அதிகாரங்களை நீக்கிவிடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசப்பற்றுள்ள தேசிய இயக்கமே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளதாக அந்த இயக்கத்தின் தலைவர் வைத்தியர் குணதாஸ அமரசேகர தெரிவித்தார்.
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அந்த இயக்கத்தின் தலைவர் வைத்தியர் குணதாஸ அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.அந்த கடிதம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபையிலிருக்கின்ற காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்கிவிடுவதுடன். அரசியலமைப்பில் 154 ஏ(3), 154 ஏ(2), 154 ஜி(3) மற்றும் மாகாண சபை பட்டியலில் 4.2 உறுப்புரை ஆகியன திருத்தியமைக்கப்பட்டு மாகாண சபை அதிகாரம் குறைக்கப்படல் வேண்டும்.இந்த அதிகாரங்களை குறைக்காமல் வடக்கு மாகாண சபைத்தேர்தலை நடத்தவேண்டாம் என்றும் எனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளேன்.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்ற நிலையில் திஸ்ஸவிதாரண,டியூ. குணசேகர மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகிய அமைச்சர்கள் நாட்டுக்கு துரோகமிழைக்கும் நடவடிக்கையினை எடுத்துவருக்கின்றனர்.அவர்கள், நாட்டை பிரிப்பதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளேன்.
தமது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் ஜனாதிபதி வடக்கு தேர்தலை நடத்துவதற்கு முயன்றால் அது ஈழம் உருவாகுவதற்கான பாதையை வெட்டுவதாகவே அமையும் என்றும் அவர் எடுத்துரைத்துள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment