Sunday, May 19

பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது பேய் கதை

prabhakaranதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற யுத்தத்தில் நந்திக்கடல் களப்பில் பலியாகிவிட்டார். அதனை அவருடைய சகாக்களே உறுதிப்படுத்திவிட்டனர்.
இந்நிலையில், பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பதை இலங்கை படைத்தரப்பு முற்றாக மறுத்துள்ளதுடன். பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பது ஒரு பேய்கதையாகும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இராணுவப்பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளதாவது,
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும் பிரிவினைவாதத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டுவருகின்றன.
அந்த பிரிவினைவாதத்திற்கு ஆதரவு நல்குவோர் இவ்வாறான பேய் கதைகளை பரப்பிவிடக்கூடும். பிரபாகரனின் தாய் மற்றும் தந்தை இலங்கை இராணுவத்திடம் சிறிதுகாலம் இருந்துள்ளனர்.
இந்தநிலையில் நந்திக்கடல் களப்பில் கண்டெடுக்கப்பட்ட சடலம் பிரபாகரனுடையது என்பதை அவருடைய சகாக்களே அடையாளம் காண்பித்துள்ளனர். பலியானது பிரபாகரன் என்பதுடன் அது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானதாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டில் இருக்கின்ற புலி பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி ஒத்தாசை நல்கின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் பிரிவினை வாதத்திற்கு நிதி சேகரிப்பதற்காக இவ்வாறான பேய் கதையை பரப்பிவிட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment