Monday, May 13

காதலனுடன் பதிவு திருமணம் சாட்சியாளருட ன் ஓட்டம்


ஓட்டம்காதலனுடன் பதிவு திருமணம் செய்துக்கொண்ட ஒன்றரை மணி நேரத்திற்குள் மணப்பெண்( காதலி) சாட்சியாளருடன் ஓடிப்போன சம்பவமொன்று கம்பளை மாவத்துற பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கல்விப்பொது தராதர சாதாரண தரப்பரீட்சையில் ஒன்பது விசேட சித்திகளை (ஏ) பெற்ற மாணவியே இவ்வாறு ஓடிவிட்டார்.
கண்டியிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் பயின்று வந்த இந்த மாணவி கண்டியிலுள்ள மற்றுமொரு பிரபல பாடசாலையில் உயர்தரத்தில் கல்விப்பயிலும் மாணவன் காதலித்துவந்துள்ளார்.
இருவரும் இரவொன்றை தனியாக கழிக்கவிரும்பினர் இந்நிலையில்  காதலியின்  நண்பி ஒருவரின் வீட்டுக்கு இருவரும் சென்றுள்ளனர்.
வீட்டிலிருந்தவர்கள் இவர்கள் இருவரையும் தனியாக தங்கவைப்பதற்கு அனுமதிக்க மறுத்துள்ளதுடன் அதன் தார்ப்பரியங்களை விளக்கி கூறியுறியுள்ளனர்.

அத்துடன், இருவருக்கும் பதிவு திருமணம் செய்து வைப்பதற்காக உலப்பனையிலுள்ள திருமண பதிவாளர் அலுவலகத்திற்கு பிற்பகல் 4.30 மணியளவில் அழைத்து சென்றனர். பதிவு திருமணம் முடித்துக்கொண்ட இருவரும் நண்பியின் வீட்டுக்கு மாலை 5.30 மணியளவில் வருகைதந்தனர்.
சந்தர்ப்பத்தை பார்த்துக்கொண்டு மணக்கோலத்திலிருந்த பெண் பதிவு திருமணத்திற்கு சாட்சி கையெழுத்திட்டவருடன் வீட்டைவிட்டு ஓடியுள்ளார். தனது முன்னாள் காதலனான ஒருபிள்ளையின் தந்தையுடனேயே குறித்த பெண் ஓடிவிட்டார்.
கைகளை கோர்த்தவாறு இருவரும் ஓடுவதை கண்ட கிராமவாசிகள் அவர்களை பிடிப்பதற்காக துரத்தியபோதும் கிராமத்தவர்களால் அவ்விருவரையும் பிடிக்கவில்லை.
அவ்விருவரும் அவ்வழியாக வந்த பஸ்ஸில் ஏறி ஓடிவிட்டனர். இந்நிலையில் இந்த சம்பவத்துடன் சகலரும் கம்பளை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர்.
காதலுடன் பதிவு திருமணமாகிவிட்டபோதும் தன்னால் பழைய காதலனை மறக்க முடியவில்லை என்பதனால் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரோடு ஓடிபோக தீர்மானித்ததாக அந்த மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சகலரையும் கடுமையாக எச்சரித்த பொலிஸார் இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment