Sunday, May 19

சவூதி பேரீச்சம்பழங்களை காலதாமதமின்றி பகிர்ந்தளிக்கவும் - கண்டி முஸ்லிம் அமைப்புகள்

 
புனித ரமழானை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கவென சவூதி அரேபிய அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்துள்ள பேரீச்சம்பழங்களை காலதாமதமின்றி பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கண்டி மாவட்ட முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
 
இவ்விடயம் குறித்து மேற்படி அமைப்புகள் மேலும் குறிப்பிடுகையில்,
 
புனித நோன்பு எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. எனவே புனித நோன்பை நோற்கவுள்ள முஸ்லிம்களுக்கு நேரகாலத்துடன் பேரீச்சம் பழங்களை பகிர்ந்தளிக்க முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக முஸ்லிம் நாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட பேரீச்சம்பழங்கள் காலதாமதமாகியே கிடைத்தன. அவ்வாறான நிலைமை இவ்வருடம் ஏற்படாதிருக்க உரிய தரப்பினர் அதற்கான நடவடிக்கையை எடுக்க முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
 
கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரபட்சமான பங்கீட்டு முறை இம்முறை இடம்பெறக் கூடாதெனவும் அவ்வமைப்புக்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றன

No comments:

Post a Comment