Saturday, May 18

இன்று நாட்டில் ஹலால் பிரச்சினை இல்லையாம் - பைசர் முஸ்தபா

Faizer Musthafa முஸ்லிம், சிங்கள மக்கள் எப்பொழுதும் ஐக்கிய மாகவே வாழ்ந்து வந் துள்ளனர். இந்நாட்டு முஸ்லிம் மக்கள் ஒருபோதும் ஆயுதங்கள் ஏந்தவில்லை. இலங்கை வரலாற்றில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோர் இந்நாட்டை ஆக்கிரமித்தனர். இந்த அனைத்து தரப்பினரும் இலங்கை நிலப்பரப்புகளை சூறையாடினர். போர் புரிந்தனர். ஆனால் இந்நாட்டு நிலங்களைக் கேட்டு ஒருபோதும் சண்டையிடாத அல்லது பிரச்சினைகளை ஏற்படுத் திக்கொள்ளாத ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகம் விளங்குகிறது.
சிங்கள மன்னர் ஆட்சிக் காலத் திலிருந்தே முஸ்லிம்கள் அந்த மன் னர்களுடனும், நாட்டின் பெரும்பான்மை இன மக்களு டனும் ஒற்றுமையாகவும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் வாழ்ந்து இன நல்லுறவையும் பேணிப் பாதுகாத்து வந்துள்ளனர். முஸ்லிம் மக்களின் பண்டைய காலத்து செயற்பாடுகளிலிருந்து எதிர்காலத்து செயற்பாடுகளை தீர்மானித்துக் கொள்ள முடியும். நாட்டின் இறைமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், வேற்று மையில்லாத இலங்கையொன்றைக் கட்டியெழுப்புவதற்காகவும் சிங்கள மக்களுடன் ஒன்றாகக் கலந்து முஸ் லிம் மக்கள் இந்நாட்டுக்காக போர் புரிந்துள்ளனர்.
சிங்கள பெளத்த மக்களுடன் முஸ்லிம் மக்களும் இந்நாட்டுக்காக உயிர்த்தியா கம் செய்துள்ளனர். பெருமளவில் அர்ப்பணிப்புடன் செயலாற்றியுள்ளனர்.
குறிப்பாகச் சொல்லப்போனால், புலிகளைத் தோற்கடிக்கும் யுத்தத்தில் முஸ்லிம் சமூகமும் பங்குதாரர்களாகத் திகழ்ந்தது. புலிகளால் யாழ்ப் பாணத்திலிருந்து சிங்கள மக்களுடன் இணைந்து முஸ்லிம் மக்களும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற் றப்பட்டனர். அவர்கள் உயிரைத் தக்க வைத்துக்கொண்டு தென் பகு தியை நோக்கி படையெடுத்து வந்தனர்.
முஸ்லிம்களின் இரத்தமும் இந்த யுத்தத்தின் போது அர்ப்பணம் செய் யப்பட்டுள்ளது.

இந்த கொடூர யுத்தத்தினால் பலரது மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது. முப்பது வருட கால யுத்தத்தின் சாபம், நாட்டை அழிவுப் பாதைக்குள் இட்டுச்சென்றது. பேதங்கள் பலவற்றை உருவாக்கியது. தற்போது நாம் அந்த பேதங்களிலிருந்து வேறுபட்டுள் ளோம். ஒரே நாட்டின் இலங்கை மக்களாக நாம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்துள்ளோம்.
சில ஊடகங்கள் மக்கள் மன ங்களை சலனப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றதா என்று எனக்கு எண்ணத் தோன் றுகின்றது.
முப்பது வருட கால யுத்தத்தின் இறுதியில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுத் தான் இந்நாட்டுக்கு சமாதானத்தைப் பெற்றுக் கொடுத்தனர். இவ்வாறு இனங் களுக்கிடையில் சக வாழ்வொன்று கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டி ருக்கின்ற ஒரு நல்ல தருணத்தில் சில குழுக்கள் சர்வதேச சமூகத்தின் சூழ்ச்சி வலையில் வீழ்ந்து செயற் பட்டுக்கொண்டிருப்பது கவலை தரும் விடயமாகும்.
இன்று நாட்டில் ஹலால் பிரச்சினை இல்லை. இந்தப் பிரச்சினை பரவலாக நாடு தழுவிய ரீதியில் ஏற்பட்ட வேளை, இதற்கு தீர்வுகாண்பதற்காக அனைவரையும் ஒன்றுசேர்த்து, சுமுகமான முறையில் வழிவகைகளை உடனடியாக செய்துகொடுத்த பாது காப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு விசேடமாக நான் இத்தருணத்தில் நன்றி கூற வேண்டும். இன்று நாட்டின் அபிவிருததித் திட் டப் பணிகளுக்கும் ஜனாதிபதியுடன் இணைந்து அவருக்கு உறுதுணையாக கோத்தாபய மிகவும் பக்கபலமாகத் திகழகின்றார்.
அன்று உருவாகிய மிகப் பாரிய பயங்கர நிலைமையை, சமாதானமாக அனைத்து தரப்பினருடன் பேசி, ஒரு சிறந்த முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவர் பக்கபலமாக இருந்து அதில் வெற்றியும் கண்டார். பாதுகாப்புச் செயலாளர், ஊடகங் களின் தவறான பிரசாரங்களை கருத் திற்கொள்ளாது, நாட்டைப் பாதுகாக்கும் பணியிலேயே தனது முழு நேரத்தையும் செலவிட்டு வருகின்றார்.
சுயமாகவும் தைரியமாகவும் ஜனாதிபதியின் சகவாழ்வு திட்டத்தின் பிரகாரம், அவ ரின் சகல வேலைத் திட் டங்களையும் மேற்கொள்வ தற்கு அவர் அரும்பாடுபடு கிறார்.
இன்று இந்த நாடு படிப் படியாக அபிவிருத்தி இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டி ருக்கிறது. நாம் ஒரு வருடத்துக்கு இரண்டு பில்லியன் டொலர் இலக்கைக் கொண்ட வெளிநாட்டு நேரடி முதலீ டுகளை இரட்டிப்பாக் குவதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றோம். வெளிநாட்டு முத லீடுகளை வரவழைத்துக் கொள்வதற்காக அல்லது தக்க வைத்துக் கொள்வதற்காக ஜனாதிபதி மற்றுமொரு அமைச்சை ஸ்தாபித்துள் ளார். முதலீட்டு ஊக்குவிப்புச் சபையை ஏற்படுத்தியதன் பின்னர் உருவான முதலீடுகளில் 67 வீதமான முதலீடுகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே பெற்றுக் கொள்ளப் பட்டுள்ளன.
கடந்த வருடம் மாத்திரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முதற் தடவையாக ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் நமது நாட்டுக்கு வந்தனர். இது 2016 ஆம் ஆண்டாகும் போது 25 இலட்சமமாக மாறும். இந்த சுற்றுலாத்துறை இலக்கை அடைந்துகொள்வதற்காக நாம் தற்போது பல்வேறு நடவடிக்கைத் திட்டங்களை மேற்கொண்டு வரு கின்றோம். அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தூரநோக்குப் பார்வை யின் மூலம் இன்று சுற்றுலாத் துறையின் அடிப்படை வசதிகள் யாவும் மிக வேகமாகவும் துரித மாகவும் அபிவிருத்தி இலக்கை நோக்கி நகர்கிறதென்றால் அது மிகையாகாது.
நான் எனது பார்வையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆசியாவின் நெல்சன் மண்டேலா வாகப் பார்க்கிறேன். தென்னா பிரிக்காவில் நெல்சன் மண்டேலா பயங்கரவாதம், பிரதேசவாதம், இனவாதம், மொழிவாதம் மற்றும் நிறவாதம் போன்றவை மலிந்து கிடந்த நாடொன்றை அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டி அவரணைத்துக் கொண்டு ‘ஒரே நாடு ஒரே குரல்’ என்ற ரீதியில் ஒன்றுமைப்படுத்திச் செயலில் காட்டினார்.
அவர் ‘உண்மைகளைக் கண்ட றியும் ஆணைக்குழு’ ஒன்றை அமைத்து, அதன்மூலம் தவறுகளை இழைத்தோருக்கு மன்னிப்பையும் கருணையையும் வழங்கி, தெற்கா பிரிக்க நாட்டை, மிகச் சிறந்த நாடாக முன்னேற்றப் பாதையில் இட்டுச் சென்றார்.
நமது ஜனாதிபதியும் இவரைப் போன்றுதான். பல்வேறு கொள்கைகளு டைய அனைத்து மதத்தினரையும் இனங்களையும் ஒரே வட்டத்திற்குள் கொண்டுவந்து ‘இலங்கையர் சிந்தனை’ என்ற ரீதியில் இந் நாட்டைப் பாதுகாப்பதற்காக மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறார். இன்று இந்த நாட்டின் பெரும்பான்மை இன மக்களுக்கு மாத்திரமல்ல, சிறுபான்மை இன மக்கள் குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், பேணுவதற்கும் உள்ள ஒரே தலைவர் நமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார்.
இந்நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக வறுமையை நமது சமூகத்திலிருந்து முற்றிலும் இல்லாதொழிப்பதற்காக பிரதேச, சாதி, சமய, நிறம், மொழி வேறுபாடுகளின்றி பரந்தளவிலான மிகப் பெரும் தூர நோக்குச் சிந்தனையுடன் ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார்.
பெரும்பான்மை இன சிங்கள மக்களின் அன்பும் ஆதரவும் எனக்கு எப்பொழுதும் இருப்பதாலேயே நான் கண்டியில் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றிபெற்று வருகிறேன். நாட்டின் பெரும்பான்மை இன சிங்கள பெளத்த மக்களின் உரிமைகளை முஸ்லிம் மக்கள் என்ற வகையில் நாம் வரவேற்கின்றோம். இதேபோன்று பெரும்பான்மை இனத்தவர்களும் முஸ்லிம் மக்களது உரிமைகளின் தேவைகளையும் அவசியத்தையும் ஏற்றுக்கொள்கின்றனர்.
இதனைத்தான் ஒரு நாட்டின் அந்நியோன்ய சமாதான சகவாழ்வு எனக் கூறுகின்றோம்.
தகவல் தினகரன்: 

No comments:

Post a Comment