Friday, May 10

கிழக்கு முஸ்லிம்கள் கூட்டமைப்புடன் இணைவார்கள்: விமல் வீரவன்ச அச்சம்

wimalமாகாண சபையின் அதிகாரங்களில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களை முற்றாக நீக்கிவிட்டே ஜனாதிபதி வடக்கில் மாகாணசபைத் தேர்தலை செப்டம்பரில் நடாத்தல் வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்ணனி தலைவர் விமல் வீரவன்ச தெரவித்தார்.
இன்று வியாழக்கிழமை பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முனன்ணி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே மேற்கண்டவாறு அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்; இதை மீறி அரசு வடக்கில் தேர்தலை நடத்துமானால் நாம் பெற்ற சுதந்திரத்தை மீள குழிதோண்டி புலிகளின் கைகளில் கொடுத்தது போன்றதாகிவிடும். வடக்கில் மாகாண சபைத் தேர்தல் ஒன்று நடைபெற்றால் நிச்சயமாக தமிழ்த் தேசிய முன்னணியே ஆட்சியைக் கைப்பற்றும்.

இதன்பின் அவர்களது முன்னைய நிகழ்ச்சிநிரல்கள் உள்ள விடயங்கள் அரங்கேறும். இதனால் புலிகளின் ஆதரவாளர்களுக்கும் இந்த நாட்டினை பிரிக்க முற்படும் வெளிநாட்டு சக்திகளுக்கும் மீண்டுமொறு தமிழ் ஈழம் உருவாகவதற்கே வழிசமைத்துக் கொடுத்தது போன்றதாகி விடும்.
இந்த மாகாணசபை முறையை இந்தியாவின் தேவைக்காகவே அப்போது 1987ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்த்ன ராஜீவ்காந்தியும் இலங்கை அமுல்படுத்தினார். யுத்த காலத்தில் 1980களில் புலிகளினால் வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம்களை மீளக் குடியேற்றவில்லை. தற்போதைய சமாதான சூழ்நிலையிலும் இம்மக்களை மீளக்குடியேற்ற முடியாமல் தமிழ்தேசிய உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்திவருகின்றனர். இச்சர்ந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசிய முன்னணிக்கு வடக்கில் ஆட்சியைக் கொடுத்ததும் எவ்வாறு செயல்படும் எனக் கேள்வி எழுப்பினார்.
வடக்கில் ஆட்சியை தமிழ்த் தேசிய முன்னணியையே பொறுப்பேற்கும். அதன்பின் தற்பொழுது நடைமுறையில் உள்ள கிழக்கின் மாகாணசபை ஆட்சியினை குழப்பி முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்து கிழக்கிலும் தமிழ்த்தேசிய முன்னணி ஆட்சியமைப்பார்கள். முஸ்லிம்களினை அரசில் இருந்து பிரிப்பதற்கே தெற்கில் உள்ள சிங்கள அமைப்பு ஒன்றுக்கு நோர்வே நிதி வழங்கி முஸ்லிம்களது இனக்குரோத நிகழ்வுகளை தெற்கில் நடாத்துகின்றது. இதனால் கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணைவதையே விரும்புவார்கள். இதனையே எதிர்பார்த்து முஸ்லிம் காங்கிரஸ் இருக்கின்றது.
தமிழ்த் தேசிய முன்னணியினர் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கான ஒரு சட்டமுலத்தைக் இந்த இரு மாகாண சபையிலும் கொண்டுவந்து இணைத்து வீடுவார்கள். அங்கு உள்ள பொலிஸாருக்கு வேறு நிரத்திலான உடையணிகள் வழங்குவார்கள். காணி அதிகாரத்தின் கீழ் வட, கிழக்கில் உள்ள சகல இராணுவ முகாம்களை மூடி காணிகளை ஒப்படைத்துவிட்டு வெளியேறும்படி உத்தரவுவிடுவார்கள்.
ஆகவேதான் இவ்விடயமாக எமது தேசிய சுதந்திர முன்னணி நாடு முழுவுதில் மே மாதம் 18ஆம் திகதி கொழும்பு களுத்துறை, கண்டி, காலி போன்ற மாவட்டங்களில் விழிப்புணர்வு கூட்டங்களை நாடத்த உள்ளது. எமது கட்சியின் அங்கத்தவர்கள் இணைந்து மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள் ஊடாக வடக்குத் தேர்தலை இடைநிறுத்துமாறு கோரி பாரியளவில் கூட்டங்களையும் 10 இலட்சம் கையெழுத்து வேட்டை மற்றும் துண்;டுப் பிரசுரங்களை தெற்கில் உள்ள மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும் அமைச்சர் விமல் தெரிவித்தார்.

No comments:

Post a Comment