Friday, May 10

55 வருடங்களின் பின்னர் ஷெய்க் கர்ளாவி காஸாவில் கால் பதித்தார்

இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் தலைவரும் பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷெய்க் யூசுப் அல் கர்ளாவி இன்று பலஸ்தீனின் காஸா மண்ணில் கால் பதித்தார்.
நேற்றைய தினம் கட்டாரிலிருந்து தனியான விமானம் மூலம் புறப்பட்ட அவர் எகிப்து எல்லை வழியாக காஸாவுக்குள் பிரவேசித்தார். 
 
ஷெய்க் கர்ளாவியுடன் 14 நாடுகளைச் சேர்ந்த சுமார் 50 மார்க்க அறிஞர்களுடன் இவ்விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
 
காஸாவுக்கு வருகை தந்த ஷெய்க் கர்ளாவியை காஸா பிரதமர் இஸ்மாயில் ஹனிய்யா வரவேற்றார். ஹமாஸ் இயக்கம் ஷெய்க் கர்ளாவிக்கு பாரிய வரவேற்பளித்தது.
 
ஷெய்க் கர்ளாவியின் வருகை தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர் இஸ்மாயில் ஹனிய்யா, அரபு வசந்தத்தின் தலைவரை , புரட்சியின் தலைவரை, பலஸ்தீன ஜிஹாதின் தலைவரை இந்தப் புனித மண்ணுக்கு வரவேற்பதில் பெருமயடைகிறேன் எனக் குறிப்பிட்டார்.
 
எகிப்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஷெய்க் கர்ளாவி இறுதியாக 1958 ஆம் ஆண்டு காஸாவுக்கு விஜயம் செய்திருந்தார். சுமார் 55 வருடங்களுக்குப் பிறகு அவர் காஸா சென்றுள்ளமை கவனிக்கத்தக்கதாகும்.
 
அடுத்தத 5 நாட்களுக்கு ஷெய்க் கர்ளாவி பலஸ்தீனில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
காஸாவில் கால் பதித்த பின்னர் கருத்து  வெளியிட்ட ஷெய்க் கர்ளாவி பலஸ்தீன மண் முற்றாக விடுதலை பெறும் எனவும் ஆரூடம் கூறினார்.
 
நாம் பலஸ்தீனை அங்குலம் அங்குலமாக விடுவிப்போம். எகிப்திலும் டியூனீசியாவிலும் நாம் வெற்றி பெற்றோம் சிரியாவிலும் வெற்றி நெருங்கிக் கொண்டிருக்கிறது எனவும் ஷெய்க் கர்ளாவி இங்கு மேலும் குறிப்பிட்டார்.
 

No comments:

Post a Comment