Saturday, April 6

மத உரிமைகளை பாதுகாக்க சட்டம் - அமைச்சர் சம்பிக்க எதிர்ப்பு

இலங்கையின் இனங்கள் மற்றும் மதங்களுக்கு எதிராக செயற்படும் குழுக்களை முழு அளவில் கட்டுப்படுத்துவதற்கான விசேட சட்டக் கோவையினை பாராளுமன்றத்தில் சமர்பிக்க திட்டமிட்டுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாட்டில் எந்தவொரு இனத்தையோ, மதத்தையோ குறிவைத்து ஏதேனும் ஒரு குழு செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
அது பொதுபலசேனாவாக இருந்தாலும் சரி, இன, மத உரிமைகளை பாதுகாக்க வேண்டியது சட்டத்தின் கடமை எனவே எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில், இனங்கள் மற்றும் மதங்களுக்கு எதிராக செயற்படும் குழுக்களை முழு அளவில் கட்டுப்படுத்துவதற்கான விசேட சட்டக் கோவை ஒன்றினை சமர்பிக்க திட்டமிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
..........................................................................................................
மத உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால் கொண்டுவரப்படும் சட்டமூலத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது என ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அடிப்படைவாத மத அமைப்புகள் மூலம் மதங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிடுதல் மற்றும் கருத்தரங்குகளை நடத்துதல் ஆகியவற்றை தடுக்கும் நோக்கில் வாசுதேவ நாணயக்கார, எதிர்வரும் 11 ஆம் திகதி அமைச்சரவையில் தாக்கல் செய்ய உள்ள அமைச்சரவை யோசனைக்கு, எதிர்ப்பை தெரிவிக்கப்படும்.
  
 கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை தாக்கல் செய்யப்படவிருந்த போதிலும் அது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள அவர் இந்த யோசனையை நிறைவேற்ற ஒருபோதும் இடமளிக்க போவதில்லை, தமது எதிர்ப்பையும் மீறி அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தால் தாம் கடுமையான தீர்மானத்தை எடுக்க போவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment