Tuesday, April 30

முஸ்லிம் அமைப்புக்களுடன் அமெரிக்க தூதுவர் என்ன பேசினார்? விசாரணை ஆரம்பம்


தூதுவர்களுக்காக ஒழுக்க நெறிகளை மீறி, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் சீசோன், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம் அமைப்புகளின் 25 பிரதிநிதிகளை கொழும்பு அழைத்து ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்திய சம்பவம் குறித்து அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 
இந்த முஸ்லிம் பிரதிநிதிகளை, அமெரிக்க தூதுவர் சந்திக்கவிருந்தமை தொடர்பான தகவல்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கும் கிடைத்திருக்கவில்லை. முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்திய, தூதுவர்  கிழக்கில் முஸ்லிம்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்துள்ளார். 
அமெரிக்க தூதுவர் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இடையிலான நடைபெற்ற ரகசிய பேச்சுவார்த்தை மூலம் தூதுவர், வெளிநாட்டு தூதுவர்கள் தொடர்பான 1961 ஆம் ஆண்டு வியன்னா இணக்கப்பாட்டை மீறியுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. 
இதற்கு முன்னர், அமெரிக்க தூதரகம், மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டமை குறித்து அரசாங்கத்திடம் கருத்துக்களை கேட்டிருந்தது

No comments:

Post a Comment