Sunday, April 28

நாம் உட்கொள்ளும் பால்மா எவ்வளவு தூய்மையானது?

Milkpowderஇறக்குமதி செய்யப்படும் அங்கர், ரத்தி, நெஸ்ப்ரே, லக்ஸ்ப்ரே மற்றும் மலிபன் போன்ற பவுடர் பால் வகைகள் தரமான மூலப்பொருட்களை கொண்டிருக்கவில்லை எனவும் நுகர்வோரின் சுகாதாரத்துக்கு ஏற்றவை அல்ல எனவும் அறியப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் பால் பவுடர் உற்பத்தியின் போது பால் கொழுப்பை அகற்றி அதற்கு பகரமாக விலங்கு மற்றும் தாவர எண்ணை வகைகளை கலப்பதுடன் இலங்கை தர நிர்ணய சபையின் ஒழுங்குகளை குறுக்கு வழிகள் மூலம் கடப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு பெறப்பட்ட பரிசோதனை அறிக்கைகளின் பிரகாரம் “மவ்பிம லங்கா பௌண்டேஷன்” அமைப்பு கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதி மனறத்தில் நெஸ்லே மற்றும் போண்டேரா ஆகிய கம்பனிகள் தமது உற்பத்தியில் உள்ள இந்த குறைபாடுகளை மறைக்கின்றன என்று ஒரு வழக்கை தாக்கல் செய்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு பிரதிவாதிகள் அனைவரும் அழைக்கப்பட்டனர். இந்த பிரதிவாதிகள் ஒரு உடன்பாடு மூலம் இந்த வழக்குக்கு தீர்வு காண முனைந்தனர். அத்துடன் பிரேரணைகள் மூலம் இந்த விடயத்தை மவ்பிம லங்கா பௌண்டேஷன் பொது மக்களுக்கு இந்த விடயத்தை அறிவிப்பதில் இருந்து தடுக்க முற்பட்டனர். அத்துடன் மவ்பிம அமைப்புக்கு எதிராக நான்கு வெவ்வேறான வழக்குகளும் இந்த நிறுவனங்களால் தொடரப்பட்டன.  

மூலப்பொருள் விடயங்களை மறைக்கும் பால் பவுடர் நிறுவனங்கள்
இலங்கையில் உள்ள பெயரிடல் (Labelling) விதிமுறைகள் வீரியமற்றவை. அத்துடன் தரக்கட்டுப்பாடு பேணும் அரச நிறுவனங்கள் உணவுப்பொருட்களின் மூலப்பொருட்களை சோதனை செய்வதற்கு தேவையான இயந்திரங்களை கொண்டிருப்பதில்லை.
அண்மையில் அமெரிக்க பாலுணவு வகைகளில் மரபணு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வளர்ச்சி ஹோர்மோன்கள் காணப்படுகின்றன என ஒரு சர்ச்சை பெரிய அளவில் வெடித்தது. இந்த வகையில் இலங்கை பால் பவுடர் சம்பந்தமான தொழிலில் சந்தையில் கிடைக்கும் பால் பவுடர் வகைகளில் உள்ள மூலப்பொருட்கள் மற்றும் சேர்வைகள் பற்றி நுகர்வோர் அறிவதற்குரிய பொறிமுறைகள் காணப்படுவதில்லை.
அண்மையில் இடம்பெற்ற ஆய்வு ஒன்றில் இலங்கையில் பெரும்பாலான பால் பவுடர் உற்பத்தியாளர்கள் தமது பொருட்களில் மூலப்பொருள் சம்பந்தமான தகவல்களை பிரசுரிப்பதில்லை என அறிய வந்துள்ளது.
சில நிறுவனங்கள் உற்பத்தியில் அடங்கியுள்ள பதார்த்தங்களை வெளியிட்ட போதும் போஷணை மூலங்கள் பற்றி எந்த தகவலும் தரப்படவில்லை. இவை பற்றி குறித்த நிறுவனங்களின் அதிகாரிகளிடம் கேள்விகள் எழுப்பப்படும் பொழுது நிறுவன பாகுபாடின்றி அனைவரும் ஒரே மாதிரியான பதில்களை தயாராக வைத்திருப்பர். தங்களது பொருட்கள் சந்தைக்கு செல்லும் முன்னர் பல வகையான தரக்கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகின்றன எனக்கூறும் அவர்கள் பால் பவுடர் தயாரிப்பின் போது என்னென்ன பொருட்கள் பாலுடன் கலக்கப்படுகின்றன என்ற கேள்விக்கு எவரும் திருப்திகரமான பதிலை அளிப்பதில்லை.
நெஸ்லே லங்கா நிறுவன அதிகாரிகள் தமது நிறுவனத்தின் பொருட்கள் தயாரிக்கப்படும் நாட்டின் அதிகாரிகளினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அங்கீகரிக்க படுவதாக கூறினர். எனினும் பால் பவுடர் உற்பத்தியை பொறுத்த வரை 50% க்கும் அதிகமான உற்பத்தி உள்ளூர் பாலை பதநிடுவதன் மூலம் பெறப்படுகிறது எனக்கூறினார். கடந்த ஆண்டு உள்ளூர் பால் பயன்பாடு 20% த்தால் அதிகரித்ததாக கூறினார்.
அதேவேளை மலிபன் பால் உற்பத்தி நிறுவனத்தில் கடமை புரியும் சிரேஷ்ட ஆய்வு அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் தமது பால் பவுடர் அவுஸ்திரேலியாவில் உள்ள தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்களின் சான்றிதல்களை பெறுகின்றன என்று கூறினார். இந்த நிறுவனத்தின் பால் பவுடர் அவுஸ்திரேலியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது. தமது வழங்குனர்கள் பொருட்களை இங்கு அனுப்பு முன் தமது உற்பத்திகள் தர நிர்ணயம் சம்பந்தமான சகல விடயங்களையும் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துகின்றனர் என அவர் கூறினார்.  
அத்துடன் இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (SLSI) மற்றும் வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் (MRI) போன்ற நிறுவனங்கள் இலங்கைக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட பின்னர் தரம் சம்பந்தமான சோதனைகளை மேற்கொள்ளுகின்றன எனவும் அவர் கூறினார். எனினும் இந்த நிறுவனங்கள் தரச்சோதனை செய்வதற்கான இயந்திரங்களை கொண்டிருப்பதில்லை என அறிய முடிகின்றது.
மில்கோ நிறுவனத்தின் தர கட்டுப்பாட்டுக்கான உதவி முகாமையாளர் நிலினி அல்விஸ் தமது பால் பவுடர் தயாரிப்பில் பசும் பால் மாத்திரமே மூலப்பொருளாக பயன்படுத்தப்படுவதாக கூறுகிறார். எவ்வித இரசாயனங்களோ அல்லது ஏனைய பொருட்களோ தமது பால் விசிறி உலர்த்தும் செய்முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என அவர் கூறுகிறார். அத்துடன் தமது உற்பத்திகள் 100% உள்நாட்டு மூலப்பொருட்கள் கொண்டு உற்பத்தி செய்யப்படுவதாகவும் இந்த மூலப்பொருட்கள் கடுமையான தரச்சோதனைகளின் பின்னரே பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். எமது உற்பத்திகள் பற்றி பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை எனவும் கூறுகிறார்.
இதேவேளை தெற்காசிய வைத்திய மற்றும் தொழில்நுட்ப கற்கை பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அமல் வகீசா இது பற்றி கூறுகையில் பால் பவுடர் தயாரிப்பு நிறுவனங்கள் தமது மூலப்பொருட்களை லேபல்களில் பிரசுரிக்க வேண்டியது சட்ட விதிகளின் மூலம் கடமையாக்கப்பட்டுள்ளது. இவை தமது உற்பத்திக்கு பாலை மாத்திரம் பயன்படுத்தினாலும் அது பிரசுரிக்க பட வேண்டும். அநேகமான நிறுவனங்கள் தமது உற்பத்தியின் போசனை வலுவை அதிகரிக்க போசனை பொருட்களை உற்பத்தியின் போது கலக்கின்றன. குறைந்தது 3 அல்லது 4 வகையான மூலப்பொருட்கள் இவ்வாறு கலக்கப்படுகின்றன என அவர் கூறுகிறார்.
இந்த கம்பனிகள் சட்ட நடவடிக்கையில் இருந்து பாதுகாக்க பட வேண்டுமெனில் இவை உண்மை சொல்ல வேண்டியதுடன் தமது மூலப்பொருட்களின் தரவுகளை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என அமல் கூறுகிறார். இந்த லேபல் தொடர்பான சட்டங்கள் பெரும்பாலும் இந்த கம்பனிகளால் பின்பற்றப்படுவது கிடையாது.

No comments:

Post a Comment