Saturday, April 27

அமீர் அலி முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தாவல் ?


ameeraly-21ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகியவர்கள் பலர் மீண்டும் அக்கட்சியில் இணையும் சாத்தியக் கூறுகள் தென்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார் . இதன் பிரதான அங்கமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமை பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சரும் தற்போதைய கிழக்குமாகாண சபை உறுபப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து தமது அரசியல் பயணத்தினை மேற்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை அல்லது பாராளுமன்ற உறுப்புரிமையை பெறலாம் என்று தெரிவிக்கப் படுகிறது.

இவ்வியடம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உபதலைவரும் கிழக்குமாகாண விவசாய அமைச்சருமான ஹாபீஸ் நஸீர் அகமட் அவர்களின் தலைமையில் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன்  25.04.2013 பேச்சுவார்தை ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எம்.எஸ்.எஸ்.அமீர் அலி  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து தேர்தல் மூலம் பாராளுமன்றம் சென்று பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து பின்னர் அதிலிருந்து அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிக்கு மாறி தற்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவுள்ளார்.
இவருக்கு கிழக்குமாகாண முதலமைச்சர் பதவி வேண்டும் என அசாங்கத்திடம் கோரியோது அதனை ஜனாதிபதி தருவதாக கூறியும் அது நிறைவேறாதவிடத்து பாராளுமன்றில் பிரதியமைச்சர் பதவி ஒன்று தருவதாக ஜனாதிபதி அவர்களினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டடிருந்தது.
இவருக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வழங்கி அதன் மூலம் பிரதியமைச்சர் பதவி வழங்குவதாற்காக பாராளுமன்ற உறுப்பினர் மாலினி பொன்சேகா அவர்களை பதவி விலக வைத்து அவ்வெற்றிடத்திற்கு அமீரலியை இட்டு நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது அவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் தான் பதவி விலகுவதாக அறிவித்தவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் சிக்கல் நிலை ஏற்பட்டிருந்தது பின்னர் அவர் தனது கடித்தினை மீளப் பெற்றுக்கொண்டார்.
அதன் பிற்பாடு அமீர் அலியின் மீண்டும் பாராளுமன்றம் செல்லும் கனவுஇடை நடுவில் கலைந்தது. இவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் நியமனம் வழங்கும் பொறுப்பு அமைச்சர் பஸீல் ராஜபக்ச அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது இது நிறைவேறாத பட்சத்தில் தற்போது அமீரலி மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸக்குத் தாவவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment