Wednesday, April 17

பொது பல சேனாவின் செயலாளரின் வாய்க்கு ஆப்பு ?


KACTகடும்போக்கு பேரினவாத அமைப்பான பொது பல சேனா அதனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நேற்று விசேட ஊடக அறிக்கையொன்று விடுத்துள்ளது.
அந்த ஊடக அறிக்கையில், இதுவரை காலமாக  பொது பல சேனா சார்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அதன் பொது செயளாலர் கலபொட அத்தே ஞானசார தேரர் அவர்களுக்கு இனிமேல் ஊடகங்களுக்கு அறிக்கை வழங்கும் அதிகாரம் இல்லை என்றும், அந்த அதிகாரம் உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் அதன் உயர் பீட உறுப்பினர் திலந்த விதானகே அவர்களுக்கு கையளிக்கப் பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் எனக்கூறப்படவில்லை, இது உள்ளக குத்துவெட்டாக இருக்கலாம் என பலபேரால் நம்பப்படுகின்றது.

மேலும் அந்த ஊடக அறிக்கையில், இதுவரை பொது பல சேனாவின் ஒரு பிரிவாக செயற்பட்டு வந்த சிங்ஹல ராவய மற்றும் ராவனா பலய ஆகிய இயக்கங்களுடன சகல தொடர்புகளையும், பொது பல சேனாவின் பெயருக்கு பங்கம் ஏற்படும் விதத்தில் செயற்பட்டமை, ஒழுக்கத்துடன் செயற்படாமை ஆகிய காரணங்களால்  2013/04/10 ஆம் தேதி முதல் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை கூறப்பட்டுள்ளது..
மேலும், பொதுபல சேனாவின் செயளாலர் கலபொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான குழு ஏப்ரல் 7ஆந் திகதி அமெரிக்கா சென்ற பின்னர்  கடந்த ஏப்ரல்9 ஆம் திகதி கூட்டப்பட்டே உயர்பீட கூட்டத்திலேயே இந்த அவசர முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அத்தோடு மேற்குறித்த அறிக்கைகளையும் திலந்த விதானகேயே விடுத்துள்ளார்.
BBS Media Release0
BBS Media Release 2

No comments:

Post a Comment