Monday, March 25

ரூமி மர்சூக் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராகிறது பொது பல சேனா

 
நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் ஹலால் சான்றிதழை விநியோகிக்கும் போது சட்டத்தை மீறி செயட்பட்டுள்ளதாகவும் விரைவில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
 
நேற்று பாணந்துறையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அந்த அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
நுகர்வோர் அதிகார சபையின் மூலம் 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமாணி அறிவித்தலின் பிரகாரம் ஹலால் சான்றிதழை வழங்கும் அதிகாரம் உலமா சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு நிறுவனம் உணவு மற்றும் பொருட்களுக்கு சான்றிதழ் வழங்குவது சட்ட விரோதமானது என கண்ட அரசாங்கம் 2008 ஆம் ஆண்டு குறித்த வர்த்தமாணி அறிவித்தலை செயலிழக்கச் செய்தது.
 
ஹலால் சான்றிதழ் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவும் உலமா சபைக்கு குறித்த சான்றிதழை வழங்கும் அதிகாரம் இல்லை என்றே தெரிவித்தது.
 
அரச அதிகாரியான ரூமி மர்சூக் இது தொடர்பில் எதுவும் கூறாது இருப்பது சட்டவிரோதமானது. அதனால் அவர் தொடர்பில் விரைவில் நாம் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment