Monday, March 25

கடைகளை மூடி எதிர்ப்பை வெளிக்காட்டுவதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை ; பௌஸி

முஸ்லிம்கள் எவரும் இன்று கடைகளை அடைக்க வேண்டாமென சிரேஷ்ட அமைச்சர் பெளஸி நேற்று வேண்டுகோள் விடுத்தார்.


கடைகளை மூடி எதிர்ப்பை வெளிக்காட்டுவதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. எனவே- கடைகளை மூடவேண்டுமென எடுக்கப்பட்டிருக்கும் ஒரு சிலரின் தீர்மானம் சிறந்ததல்ல.

இப்படியான அவசரப் போக்குடன் செயற்படுவது ஆரோக்கியமானதல்ல. சிந்தித்து செயற்பட வேண்டுமெனவும் சிரேஷ்ட அமைச்சர் பெளஸி கேட்டுக் கொண்டுள்ளார்.

அற்ப அரசியல் இலாபம் தேடும் வகையில் கடைகளை மூடி எதிர்ப்பை வெளிக்காட்டுமாறு சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை யாரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment