Thursday, March 28

இலங்கையின் ஏழாவது தேசத்துக்கு மகுடம் கண்காட்சியில் முஸ்லிம்களின் வருகை குறைவு- ஏற்பாட்டாளர்கள் தெரிவிப்பு.




இலங்கையின் ஏழாவது தேசத்துக்கு மகுடம் கண்காட்சி அம்பாறை ஹாடி உயர் தொழில் நுட்பக்கல்லூரி வழாகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது. வியத்தகு விந்தை தேசிய கண்காட்சி கடந்த சனிக்கிழமை நாட்டின் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட நாள் முதல் இன்று  புதன்கிழமை 2013.03.27 ஆம் திகதி வரை மிக வெற்றியுடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த நாள் தொடர்க்கம் நேற்றுவரை நான்கு நாள் கண்காட்சியின் போது 10 இலட்சம் பொதுமக்கள் இக்கண்காட்சியை கண்டு களித்திருப்பதாகவும் அதிலும் விஷேடமாக நான்காம் நாளான செவ்வாய்க் கிழமையன்று மாத்திரம் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கண்காட்சியினை கண்டுகளித்துள்ளதாகவும் இக்கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை கண்டு களிக்க மிகக் குறைந்த முஸ்லிம் மக்கள் பங்கெற்றுக் கொண்டதாகவும் இதனால் தாம் எதிர்பார்த்த பெரும்தொகை மக்கள் வருகை தரவில்லையெனவும் தெரிவித்த ஏற்பாட்டாளர்கள் இருந்தபோதிலும் தற்போது 10 இலட்சத்துக்கும் அதிகம் மக்கள் பங்கேற்றுக் கொண்டதும் மிகப்பாரிய வெற்றியாகும் எனவும் இதனை நுழைவுச்சீட்டு விற்பனையில் இருந்து அறியக் கிடைத்திருப்பதாகவும்  ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment