
பலவந்தமாக பௌத்தர்களை கிறிஸ்தவர்களாக
மாற்றும் கிறிஸ்த்தவ சபைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அந்த
அமைப்பின் உறுப்பினர் கீரமா ஜோதி தேரர் தெரிவித்துள்ளார்.சில அரச சார்பற்ற
நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுகின்ற இவ்வாறான கிறிஸ்தவ அமைப்புக்கள்,
பலவந்தமான முறையில் மக்களை மனவசியத்துக்கு உட்படுத்தி கிறிஸ்தவர்களாக
மாற்றி வருகின்றனர்.
இந்த அமைப்புகள் இலங்கையில் மதங்களாக பதிவு
செய்யப்படுவதில்லை. எனினும் அவை அரச சார்பற்ற நிறுவனங்களாகவே
இயங்குகின்றன. இவ்வாறு செயற்பட்ட அமைப்பு ஒன்றின் போதகர் ஒருவர் அண்மையில்
திஸ்ஸ மஹாராமவில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இவ்வாறான அமைப்புக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க இருப்பதாக அந்த இயக்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
பெளத்த கடும்போக்கு அமைப்புக்கள் நாட்டில்
முதலில் கிறித்தவர்களுக்கு எதிராகவே முனைப்புடன் செயல்பட்டு வந்தமை
குறிப்பிடத்தக்கது . அதன் பின்னரே முஸ்லிம்கள் மீது கவனத்தை திருப்பியது.
No comments:
Post a Comment