Thursday, February 28

ஹலாலை அரசு பொறுப்பேற்பது பொருத்தமற்றது: கெஹலிய






ஹலால் சான்றிதழ் சமயம் ஒன்றைச் சார்ந்த விடயமாகும். அதனை அரசாங்கம் பொறுப்பேற்று நடைமுறைப்படுத்துவது என்பது பொருத்தமற்றதாகும். ஹலால் சான்றிதழ் தமது கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என அரசாங்கம் ஒரு போதும் சிந்தித்தது கிடையாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சற்று முன்னர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
ஹலால் முஸ்லிம் மக்களின் சமயம் சார்ந்த விடயம் ஆகையால் அனை உலமா சபை நிர்வகிப்பதே பொருத்தமானது. என்னைப் பொறுத்தவரை ஹலால் என்பது பிரச்சினைக்குரிய விடயமல்ல. சில குழுவினரே அதனைப் பிரச்சினையாக மாற்றியுள்ளனர். இதுபற்றி அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.
 
ஹலால் சான்றிதழை அரசாங்கம் பொறுப்பேற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நேற்று முன்தினம் வேண்டுகோள்விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
.

No comments:

Post a Comment